பிக் பேஷ் லீக் டி20 தொடரில் கரோனா தொற்று காரணமாக ஒத்திவைக்கப்பட்டிருந்த 27ஆவது லீக் ஆட்டம் இன்று நடைபெற்றது. இப்போட்டியில் மெல்போர்ன் ஸ்டார்ஸ் - பெர்த் ஸ்காச்சர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடட்தின.

Advertisement

இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த பெர்த் ஸ்காச்சர்ஸ் அணி, நிக் ஹாப்சன், லௌரி எவன்ஸ், ஆஷ்டர்ன் டர்னர் ஆகியோரின் அதிரடியான அட்டத்தினால் 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 196 ரன்களைச் சேர்த்தது. 

Advertisement

இதில் அதிகபட்சமாக லௌரி எவன்ஸ் 69 ரன்களையும், கேப்டன் ஆஷ்டன் டர்னர் 47 ரன்காளையும் சேர்த்தனர். மெல்போர்ன் அணியில் ஹாரிஸ் ராவுஃப் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். 

இதையடுத்து கடின இலக்கை துரத்திய ஸ்டார்ஸ் அணியின் முன்வரிசை வீரர்கள் வந்த வேகத்திலேயே விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். 

இருப்பினும் மறுமுனையில் போராடிய வெப்ஸ்டர் அரைசதம் கடந்து நம்பிக்கையளித்தார். பின் 63 ரன்களைச் சேர்த்திருந்த வெப்ஸ்டரும் ஆட்டமிழக்க, ஸ்டார்ஸ் அணியின் தோல்வி உறுதியானது. 

இதனால் 20 ஓவர்கள் முடிவில் ஸ்டார்ஸ் அணியால் 9 விக்கெட் இழப்பிற்கு 149 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. ஸ்காச்சர்ஸ் அணி தரப்பில் மேத்யூ கெல்லி 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். 

Advertisement

இதன்மூலம் பெர்த் ஸ்காச்சர்ஸ் அணி 47 ரன்கள் வித்தியாசத்தில் மெல்போர்ன் ஸ்டார்ஸை வீழ்த்தி அபார வெற்றியைப் பெற்றது.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News