பிபிஎல் 2022: ஸ்டிரைக்கர்ஸை வீழ்த்தி தண்டர் அபார வெற்றி!

Updated: Sun, Jan 02 2022 19:32 IST
Image Source: Google

பிக் பேஷ் லீக் டி20 தொடரில் இன்று நடைபெற்ற 32ஆவது லீக் ஆட்டத்தில் சிட்னி தண்டர் - அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. 

இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த சிட்னி தண்டர் அணி மேத்யூ கிக்ஸின் அதிரடியான அட்டத்தினால் 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 172 ரன்களைச் சேர்த்தது. 

இதில் அதிகபட்சமாக மேத்யூ கிக்ஸ் 93 ரன்களைச் சேர்த்தார். ஸ்டிரைக்கர்ஸ் அணி தரப்பில் பீட்டர் சிடில், வெஸ் அகர் தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். 

இதையடுத்து கடின இலக்கை துரத்திய ஸ்டிரைக்கர்ஸ் அணியில் ரென்ஸோ, நெல்சன் ஆகியோரைத் தவிர மற்ற வீரர்கள் சோபிக்க தவறினர். 

இதனால் 19.1 ஓவர்களிலேயே அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 144 ரன்களை மட்டுமே எடுத்தது. தண்டர் அணி தரப்பில் முகமது ஹஸ்னைன் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். 

இதன்மூலம் சிட்னி தண்டர் அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸை வீழ்த்தி அபார வெற்றியைப் பெற்றது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை