பிபிஎல் 2022: கிளென் மேக்ஸ்வெல்லிற்கு கரோனா!

Updated: Wed, Jan 05 2022 10:32 IST
Image Source: Google

ஆஸ்திரேலியாவின் உள்ளூர் டி20 லீக் தொடரான பிக் பேஷ் லீக்கின் 11ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில் பலத்த கரோனா பாதுக்காப்பு நெறிமுறைகளைப் பின்பற்றி நடைபெற்று வரும் இத்தொடரில், அடுத்தடுத்து வீரர்களுக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது பெரும் பிரச்சனையாக மாறியுள்ளது. 

இந்நிலையில் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணியின் கேப்டன் கிளென் மேக்ஸ்வெல்லிற்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. 

இதையடுத்து அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். மேலும் அவருக்கு பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளதாகவும், அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.

இதேபோல் பிரிஸ்பேன் ஹீட் அணியைச் சேர்ந்த சில வீரர்களுக்கும் நேற்றைய தினம் கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதால், சக வீரர்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை