மகளிர் வருடாந்திர ஒப்பந்த பட்டியலை வெளியிட்டது பிசிசிஐ!

Updated: Thu, May 20 2021 13:15 IST
BCCI announces Annual Player Contracts for Indian Women's team (Image Source: Google)

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் இன்று மகளிர் அணிக்கான வருடாந்திர வீராங்கனைகள் ஒப்பந்த பட்டியலை வெளியிட்டுள்ளது. அதன்படி கடந்தாண்டு அக்டோபர் மாதம் முதல் இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வரையிலான வீராங்கனைகள் ஒப்பந்த பட்டியல் இன்று வெளியாகியுள்ளது. 

இதில், ஆடவர் அணியைப் போலவே வீராங்கனைகள் மூன்று பகுதிகளாக பிரிக்கப்பட்டு, அப்பகுதிகளில் அடிப்படையில் ஒப்பந்த தொகையானது நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

இதில் ஏ பிரிவில் இடம்பெற்ற வீராங்கனைகளுக்கு ரூ. 50 லட்சமும், பி பிரிவில் இடம்பெற்றுள்ள வீராங்கனைகளுக்கு ரூ.40 லட்சமும், சி பிரிவு வீராங்கனைகளுக்கு ரூ.30 லட்சமும் ஒப்பந்த தொகையாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

ஏ பிரிவில் இடம்பெற்ற வீராங்கனைகள் 

  • ஹர்மன்பிரீத் கவுர்
  • ஸ்மிருதி மந்தனா
  • பூனம் யாதவ்

பி பிரிவில் இடம் பெற்ற வீராங்கனைகள் 

  • மிதாலி ராஜ்
  • ஜூலன் கோஸ்வாமி
  • தீப்தி சர்மா
  • பூனம் ராவத்
  • ராஜேஸ்வரி கெய்க்வாட் 
  • ஷஃபாலி வர்மா
  • ராதா யாதவ்
  • ஷிக்கா பாண்டே
  • தனியா பாட்டியா
  • ஜெமிமா ரோட்ரிக்ஸ்

சி பிரிவில் இடம்பெற்ற வீராங்கனைகள்

  • மான்சி ஜோஷி
  • அருந்ததி ராய் 
  • பூஜா வஸ்டாகர்
  • ஹர்லீன் டோல்
  • பிரியா புனியா
  • ரிட்சா கோஷ்
TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை