வீரர்களின் ஒப்பந்த பட்டியலை வெளியிட்ட பிசிசிஐ! ஏ+இல் இணைந்த ஜடேஜா!

Updated: Mon, Mar 27 2023 10:43 IST
Image Source: Google

இந்திய கிரிக்கெட் அணி வீரர்களுக்கான ஒப்பந்த பட்டியலை பிசிசிஐ தற்போது வெளியிட்டுள்ளது. அதாவது ஒவ்வொரு ஆண்டும் போட்டிகள் விளையாடினாலும் சரி விளையாட விட்டாலும் சரி குறிப்பிட்ட வீரர்களை பிசிசிஐ ஒப்பந்தம் செய்து கொள்ளும். அவர்களுக்கு போட்டி ஊதியத்தை சேர்க்காமல் ஆண்டு ஊதியம் என தனியாக வழங்கப்படும்.

இதில் ஏ + அதிகபட்சமாக 7 கோடி ரூபாயும், ஏ குரூப்பில் ஐந்து கோடி ரூபாயும், பி குரூப்பில் மூன்று கோடி ரூபாயும், சி பிரிவில்  ஒரு கோடி ரூபாயும் சம்பளம் நிர்ணயிக்கப்படும். இந்த நிலையில் பிசிசிஐ வெளியிட்டுள்ள பட்டியலில் ரவீந்திய ஜடேஜா வின் ஒப்பந்தம் ஏ+ பிரிவுக்கு உயர்த்தபட்டுள்ளார்.முன்னதாக ஏ பிரிவில் இருந்த ஜடேஜா, தற்போது ஏ+ பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார். இதன் மூலம் கோலி ,ரோஹித் சர்மா, ஜஸ்ப்ரித் பும்ரா, ரவீந்திர ஜடேஜா ஆகியோர் ஆண்டு ஊதியம் 7 கோடி ரூபாய் ஆகும்.

இதேபோன்று இந்திய அணியின் நட்சத்திர வீரர் கேஎல் ராகுல் சம்பளம் ஏ பிரிவிலிருந்து, பி பிரிவுக்கு அதிரடியாக குறைக்கப்பட்டுள்ளார். ஏ பிரிவில் 5 கோடி ரூபாய் வழங்கப்பட்ட நிலையில் தற்போது அவருடைய ஊதியம் மூன்று கோடியாக மாற்றப்பட்டுள்ளது. இதேபோன்று ஆல்ரவுண்டர் அக்ஸர் படேல் ஊதியம் அதிகரிக்கப்பட்டுள்ளது. பி பிரிவில் மூன்று கோடி ரூபாய் வழங்கப்பட்டு வந்த அக்சர் பட்டேலுக்கு தற்போது 5 கோடி ரூபாய் என ஊதியம் உயர்த்தப்பட்டுள்ளது.

இதேபோன்று ஹர்திக் பாண்டியாவின் ஊதியமும் ஒரு கோடி ரூபாயிலிருந்து 5 கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டிருக்கிறது. இதேபோன்று இந்திய அணி நட்சத்திர வீரர்கள் ஷிப்மன் கில் மற்றும் சூரியகுமார் யாதவ் ஆகியோரின் ஊதியம் ஒரு கோடி ரூபாயிலிருந்து 3 கோடி ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதேபோன்று இடதுகை வேகப்பந்துவீச்சாளர் ஆர்ஸ்தீப் சிங் மற்றும் விக்கெட் கீப்பர் கே.எஸ் பரத்துக்கு முதல் முறையாக ஒப்பந்தம் வழங்கப்பட்டு சி பிரிவில் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள். மேலும் சஞ்சு சாம்சன், தீபக் ஹூடா, சாஹல் ஆகியோருக்கு சி பிரிவில் ஒப்பந்தம் வழங்கப்பட்டிருக்கிறது. இதனிடையே மாயங் அகர்வால்,விரித்திமான் சாஹா, ஹனுமன் விகாரி, ரஹானே,இஷாந்த் சர்மா ஆகியோர்களுக்கு ஒப்பந்தம் வழங்கப்படவில்லை. இதைப் போன்று சிஎஸ்கே வீரர் தீபக்சாகர் மற்றும் வேகப்பந்துவீச்சாளர் புவனேஸ்வர் குமார் ஆகியோர் பிசிசிஐ ஒப்பந்தத்தில் இருந்து நீக்கப்பட்டிருக்கிறார்கள்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை