இந்திய அணியின் அடுத்த பயிற்சியாளர் ஆகிறாரா கௌதம் கம்பீர்?

Updated: Fri, May 17 2024 20:17 IST
Image Source: Google

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டின் பதவிக்காலம், வரவுள்ள ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருடன் நிறைவடையவுள்ளது. முன்னதாக ரவி சாஸ்திரி தனது பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து விலகியதும் ராகுல் டிராவிட் இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். 

இதுவரது பயிற்சியின் கீழ் இந்திய அணி சொந்த மண்ணில் நடைபெற்ற ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் இறுதிப்போட்டி வரை சென்று தோல்வியைத் தழுவியது. மேலும் அத்தொடருடனே டிராவிட்டின் பயிற்சி காலமும் நிறைவடைந்த நிலையில், அவரது பதிவிக்காலம் மேலும் ஓராண்டிற்கு நீட்டிக்கப்பட்டது. இதையடுத்து தற்போது டி20 உலகக்கோப்பை தொடருடன் ராகுல் டிராவிட்டின் பதவி காலம் நிறைவடைகிறது. 

இதனால் இந்திய அணிக்கான புதிய தலைமை பயிற்சியாளரைத் தேர்வு செய்யும் முயற்சியில் பிசிசிஐ இறங்கியுள்ளது. அதன்படி பயிற்சியாளர்களுக்கான விண்ணப்பங்கள் மற்றும் நெறிமுறைகளையும் பிசிசிஐ சமீபத்தில் அறிவித்திருந்தது. மேற்கொண்டு சர்வதேச அரங்கில் பயிற்சியாளர்களாக கலக்கிய நியூசிலாந்தின் ஸ்டீஃபன் பிளெமிங், ஆஸ்திரேலியாவின் ஜஸ்டின் லாங்கர் ஆகியோர் இந்திய அணியின் அடுத்த பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின. 

இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் கௌதம் கம்பீரை இந்திய அடுத்த அணியின் தலைமை பயிற்சியாளராக நியமிக்க பிசிசிஐ ஆர்வம் காட்டி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு முன் ஐபிஎல் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் ம்ற்றும் தற்போது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ஆலோசகராக பணியாற்றிவரும் கௌதம் கம்பீர், இந்த அணிகளை பிளே ஆஃப் சுற்றுக்கு அழைத்துச் செல்வதில் முக்கிய பங்காற்றியுள்ளார். 

 

அதுமட்டுமின்றி சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணியின் தொடக்க வீரர் மற்றும் மிடில் ஆர்டர் வீரராக விளையாடிய கௌதம் கம்பீர் இதுவரை 58 டெஸ்ட், 147 ஒருநாள் மற்றும் 38 டி20 போட்டிகளில் விளையடி 10ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரன்களைக் குவித்துள்ளார். அதுமட்டுமின்றி இந்திய அணி 2007ஆம் ஆண்டு டி20 உலகக்கோப்பை மற்றும் 2011ஆம் ஆண்டு ஒருநாள் உலகக்கோப்பை வென்ற அணிகளிலும் முக்கிய பங்காற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை