IRE vs IND: ஹர்திக் தலைமையில் இந்திய அணி; ராகுல் த்ரிபாதிக்கு வாய்ப்பு!
இந்திய அணி தற்போது தென்னாப்பிரிக்க அணியுடனான 5 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. கடந்த ஜூன் 9ஆம் தேதி தொடங்கிய இந்த தொடர் ஜூன் 19ஆம் தேதியுடன் முடிவடைகிறது.
இதனையடுத்து இந்திய அணி அடுத்ததாக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது. அங்கு 2 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் மோதுகிறது. இந்த போட்டிகள் வரும் ஜுன் 26ஆம் தேதி மற்றும் ஜூன் 28ஆம் தேதிகளில் நடைபெறவுள்ளது. இதற்கான இந்திய அணி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய அணியின் முன்னணி வீரர்கள் இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கு செல்வதால், அயர்லாந்து தொடருக்கு புதிய அணி உருவாக்கப்பட்டுள்ளது. அதன்படி அந்த அணிக்கு ஹர்திக் பாண்டியா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் அணியின் துணைக் கேப்டனாக புவனேஷ்வர் குமார் செயல்படவுள்ளார். அவரின் தலைமையில் 17 பேர் கொண்ட அணி உருவாக்கப்பட்டுள்ளது.
தென் ஆப்பிரிக்க தொடரில் பங்கேற்ற பல வீரர்களும் இதில் அடங்கியுள்ளனர். காயத்தால் பாதிக்கப்பட்டிருந்த சூர்யகுமார் யாதவ் மீண்டும் இந்திய அணிக்கு திரும்பியுள்ளார். இதே போல ஐபிஎல் தொடரில் கலக்கிய ராகுல் திரிபாதிக்கு முதல் முறையாக இந்திய அணிக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
அதேபோல் அயர்லாந்து கிரிக்கெட் வாரியமும் இத்தொடருக்கான அணியை இன்று அறிவித்துள்ளது. அதன்படி அந்த அணியில் ஸ்டீபன் டோஹனி, கோனார் ஓல்பெர்ட் ஆகியோர் அறிமுக வீரர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்திய அணி: ஹர்திக் பாண்ட்யா, புவனேஷ்வர் குமார், இஷான் கிஷான், ருதுராஜ் கெயிக்வாட், சஞ்சு சாம்சன், சூர்யகுமார் யாதவ், வெங்கடேஷ் ஐயர், தீபக் ஹூடா, ராகுல் திரிபாதி, தினேஷ் கார்த்திக், யுவேந்திர சாஹல், அக்ஷர் பட்டேல், ரவி பிஷ்னாய், ஹர்ஷல் பட்டேல், ஆவேஷ் கான், அர்ஷ்தீப் சிங், உம்ரான் மாலிக்
அயர்லாந்து அணி: ஆண்ட்ரூ பால்பிர்னி (கேப்டன்), மார்க் அதிர், கர்டிஸ் கேம்பர், கரேத் டெலானி, ஜார்ஜ் டோக்ரெல், ஸ்டீபன் டோஹனி, ஜோஷ் லிட்டில், ஆண்ட்ரூ மெக்பிரைன், பேரி மெக்கார்த்தி, கோனார் ஓல்பர்ட், பால் ஸ்டிர்லிங், ஹாரி டெக்டர், லோர்கன் டக்கர், கிரேக் யங்.