இந்திய அணியின் கேப்டனானார் ஷுப்மன் கில்!
இந்திய அணி இந்த வருடத்தில் பல கேப்டன்களை பார்த்துவிட்டது. கோலி கேப்டன் பதவியிலிருந்து விலகியப் பிறகு ரோஹித் சர்மா நிரந்தர கேப்டனாக இருந்த போதிலும், அவருக்கு ஓய்வு கொடுக்கும் விதமாக மாற்று கேப்டன் அறிமுகப்படுத்தப்பட்டனர்.
அந்த வகையில் கேஎல் ராகுல், ஷிகர் தவன், ரிஷப் பந்த், ஹார்திக் பாண்டியா போன்றவர்கள் கடந்த 6 மாதங்களில் இந்திய அணிக் கேப்டனாக இருந்தனர். இங்கிலாந்துக்கு எதிரான பயிற்சி டி20 போட்டியில் தினேஷ் கார்த்திக் கேப்டனாக இருந்தார்.
இந்நிலையில் தற்போது இந்திய அணிக்கு மேலும் ஒரு கேப்டன் கிடைத்துள்ளார். அது வேறுயாருமில்லை இந்திய அணியின் இளம் தொடக்க வீரர் ஷுப்மன் கில்தான்.
செம்படம்பர் மாதம் இந்தியா வரும் நியூசிலாந்து ஏ அணி மூன்று போட்டிகள் கொண்ட கொண்ட டெஸ்ட் (4 நாட்கள்), மூன்று போட்டிகள் கொண்ட அதிகாரப்பூர்வமற்ற ஒருநாள் தொடர்களில் பங்கேற்று விளையாட உள்ளது. இந்த அணியில் ரஞ்சிக் கோப்பையில் சிறப்பாக செயல்பட்ட இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
கேப்டனாக ஷுப்மன் கில் தேர்வு செய்யப்பட்டுள்ளார். டெஸ்ட் அணியில் தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர், கடந்த ரஞ்சிக் கோப்பையில் தொடர்ந்து சதங்களை விளாசிய சர்ப்ராஸ் கான், ஷர்தூல் தாகூர், முகமது சிராஜ், ஷாபஸ் அகமது, யாஷஸ்வி ஜெய்ஷ்வால், ராஜத் படிதர் போன்றவர்களுக்கு இடம் கிடைத்துள்ளது.
அதேபோல் ஒருநாள் அணிக்கும் கில்தான் கேப்டன். பிரித்வி ஷா, ருதுராஜ் கெய்க்வாட், ஹனுமா விஹாரி, இஷான் கிஷன், ரிஷி தவன், வாஷிங்டன் சுந்தர், ராகுல் தஹார், யாஷ் தயாள், பிரசித் கிருஷ்ணா போன்றவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
டெஸ்ட் இந்திய அணி: ஷுப்மன் கில் (கேப்டன்), யாஷ் துபே, ஹனுமா விஹாரி, ரஜத் படிதார், சர்பராஸ் கான், வாஷிங்டன் சுந்தர், கே.எஸ். பாரத், ஷம்ஸ் முலானி, ஜலஜ் சக்சேனா, ஷர்துல் தாக்கூர், முகமது சிராஜ், யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஷுபம் சர்மா, அக்ஷய் வாட்கர், ஷாபாஸ் அகமது, மணிசங்கர் முரசிங்.
ஒருநாளுக்கான இந்திய அணி: ஷுப்மன் கில் (கேப்டன்), பிருத்வி ஷா, ருதுராஜ் கெய்க்வாட், ஹனுமா விஹாரி, இஷான் கிஷன், ரிஷி தவான், வாஷிங்டன் சுந்தர், பிரவீன் துபே, மயங்க் மார்கண்டே, பிரசித் கிருஷ்ணா, முகமது சிராஜ், கே.எஸ். பாரத், வெங்கடேஷ் ஐயர், புல்கித் நரங் , ராகுல் சாஹர், யாஷ் தயாள்.