ஆசிய கோப்பை 2022: கேஎல் ராகுலுக்கு அணியில் இடமா?

Updated: Thu, Aug 04 2022 18:34 IST
Image Source: Google

நடப்பாண்டுக்கான ஆசியக்கோப்பை தொடருக்கான முழு அட்டவணையும் சமீபத்தில் வெளியிடப்பட்டது. அதன்படி ஆகஸ்ட் 27ஆம் தேதி தொடங்கும் இந்த தொடர் வரும் செப்டம்பர் 11ஆம் தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறுகிறது.

இந்த தொடருக்கான 15 பேர் கொண்ட அணியை பாகிஸ்தான் உள்ளிட்ட மற்ற அணிகள் வெளியிட்டு வருகின்றன. அந்தவகையில் இந்திய அணிக்கான வீரர்கள் தேர்வு வரும் ஆகஸ்ட் 8ஆம் தேதி தொடங்கவுள்ளது. இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான டி20 தொடர் ஆகஸ்ட் 7ஆம் தேதி முடிவடைகிறது. இந்த போட்டிகளில் வீரர்களின் செயல்பாட்டை பார்த்தபின் மறுநாளே அணி உருவாக்கப்படுகிறது.

இந்திய அணியின் பேட்டிங்கை பொறுத்தவரையில் கேப்டன் ரோஹித் சர்மாவுடன் யார் ஓப்பனிங் விளையாடுவார் என்ற குழப்பம் எழுந்துள்ளது. காயத்தினால் பாதிக்கப்பட்ட கே.எல்.ராகுல், ஐபிஎல் தொடருக்கு பின் எந்தவொரு போட்டியிலும் விளையாடாமல் இருந்தார். பின் கரோனாவால் பாதிக்கப்பட்ட அவர் இன்னும் முழு உடற்தகுதி பெறவில்லை எனக்கூறப்படுகிறது.

இந்நிலையில் என்ன ஆனாலும் கே.எல்.ராகுலின் பெயரை தான் இந்திய அணியின் ஓப்பனிங்கிற்கு பிசிசிஐ தேர்வு செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 15 பேர் கொண்ட இந்த அணியில் கே.எல்.ராகுல் ( உடற்தகுதியை நிரூபித்தால் விளையாடலாம் ) எனும் அடிப்படையில் சேர்க்கப்படுகிறார். ஒருவேளை அவரால் நிரூபிக்க முடியவில்லை மட்டுமே மற்றவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும்.

இந்தாண்டில் இன்னும் ஒரு சர்வதேச டி20இல் கூட கே.எல்.ராகுல் விளையாடவில்லை. திடீரென அவரை ஆசியக்கோப்பை தொடரில் கொண்டு வருவது பெரிய ரிஸ்க்காக அமையும். எனவே அவரை தவிர்த்து, சுப்மன் கில், ருதுராஜ் கெயிக்வாட் போன்ற இளம் வீரர்களுக்கு வாய்ப்பு தர வேண்டும் என வல்லுநர்கள் கூறி வருகின்றனர்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை