சர்வதேச ஒருநாள் போட்டிகளிலிருந்து பென் ஸ்டோக்ஸ் ஓய்வு - ரசிகர்கள் அதிர்ச்சி!

Updated: Mon, Jul 18 2022 17:20 IST
Image Source: Twitter

இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரரும், டெஸ்ட் அணியின் கேப்டனுமானவர் பென் ஸ்டோக்ஸ். இவரது தலைமையிலான இங்கிலாந்து அணி சமீபத்தில் நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை வென்றதுடன், இந்தியாவுடனான் டெஸ்டை சமன் செய்திருந்தது.

ஆனால் சமீப காலமாக ஒருநாள் போட்டிகளில் அவரால் சிறப்பாக செயல்படமுடியாமல் உள்ளார். அதிலும் இந்திய அணிக்கெதிரான தொடரின் ஒரு போட்டியில் கூட அவரால் அரைசதத்தை கடக்க முடியவில்லை.

இதனால் அவர் சர்வதேச ஒருநாள் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். அதன்படி நாளை நடைபெறும் தென் ஆப்பிரிக்க அணிக்கெதிரான முதல் ஒருநாள் போட்டியுடன் ஓய்வு பெறவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதுவரை இங்கிலாந்து அணிக்காக 103 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள பென் ஸ்டோக்ஸ் 3 சதம், 21 அரைசதங்கள் என 2,892 ரன்களையும், 74 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார். மேலும் கடந்த 2019ஆம் ஆண்டு இங்கிலாந்து அணி முதல் முறையாக ஒருநாள் உலகக்கோப்பை தொடரை வெல்வதற்கும் முக்கிய காரணமாக திகழ்ந்தவர் பென் ஸ்டோக்ஸ் என்பது குறிப்பிடத்தக்கது.

 

இந்நிலையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் கவனம் செலுத்துவதற்காக ஒருநாள் போட்டிகளிலிருந்து ஓய்வை அறிவித்துள்ள பென் ஸ்டோக்ஸின் முடிவு ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை