மீண்டும் காயத்தை சந்தித்த ஸ்டோக்ஸ்; இங்கிலாந்து அணிக்கு பின்னடைவு!
நியூசிலாந்து - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி டிசம்பர் 14 தேதி ஹாமில்டனில் உள்ள செடான் பார்க் கிரிக்கெட் மைதானத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த் நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 347 ரன்களைச் சேர்த்த்து.
இதில் அதிகபட்சமாக மிட்செல் சாண்ட்னர் 76 ரன்களையும், டம் லேதம் 63 ரன்களையும் சேர்த்தனர். இங்கிலாந்து அணி தரப்பில் மேத்யூ பாட்ஸ் 4 விக்கெட்டுகளையும், கஸ் அட்கின்சன் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.இதனையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய இங்கிலாந்து அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். அந்த அணியில் அதிகபட்சமாக ஜோ ரூட் 32 ரன்களைச் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் விக்கெட்டை இழந்தனர்.
இதனால் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 35.4 ஓவர்களில் 143 ரன்களை மட்டுமே சேர்த்து ஆல் அவுட்டானது. நியூசிலாந்து தரப்பில் மேட் ஹென்றி 4 விக்கெட்டுகளையும், வில்லியம் ஓ ரூக், மிட்செல் சான்ட்னர் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதன்மூலம் நியூசிலாந்து அணி 202 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடர்ந்து விளையாடி வருகிறது. இதில் நட்சத்திர வீரர் கேன் வில்லியம்சன் சதமடித்து அசத்தியுள்ளார்.
அதேசமயம் மறுபக்கம் இங்கிலாந்து அணி வீரர்கள் விக்கெட்டுகளை கைப்பற்ற முடியாமல் தடுமாறி வருகின்றனர். இந்நிலையில் இப்போட்டியில் இங்கிலாந்து அணிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அதன்படி அந்த அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பந்துவீசிய சமயத்தில் காயம் காரணமாக மைதானத்தில் இருந்து வெளியேறினார். இதனால் இப்போட்டியில் பென் ஸ்டோக்ஸ் மேற்கொண்டு பந்துவீச முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும் அவரால் பேட்டிங் செய்ய முடியுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
நியூசிலாந்து பிளேயிங் லெவன்: டாம் லாதம் (கே), வில் யங், கேன் வில்லியம்சன், ரச்சின் ரவீந்திரா, டேரில் மிட்செல், டாம் ப்ளூன்டெல், க்ளென் பிலிப்ஸ், மிட்செல் சான்ட்னர், மாட் ஹென்றி, டிம் சவுத்தி, வில்லியம் ஓ ரூக்ர்
Also Read: Funding To Save Test Cricket
இங்கிலாந்து பிளேயிங் லெவன்: ஜாக் கிராலி, பென் டக்கெட், ஜேக்கப் பெத்தேல், ஜோ ரூட், ஹாரி புரூக், ஒல்லி போப், பென் ஸ்டோக்ஸ் (கே), கஸ் அட்கின்சன், மேத்யூ பாட்ஸ், பிரைடன் கார்ஸ், ஷோயப் பஷீர்.