டி20 உலகக்கோப்பை: இந்த இரு அணிகள் தான் இறுதிப்போட்டியில் விளையாடும் - பென் ஸ்டோக்ஸ்!

Updated: Sat, Oct 30 2021 15:21 IST
Ben Stokes predicts finalists of T20 World Cup (Image Source: Google)

டி20 உலக கோப்பை தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இந்த உலக கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள அணிகளாக இந்தியா, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் ஆகிய அணிகள் பார்க்கப்பட்டன. பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி வலுவாக இருக்கிறது என்றவகையிலும் பாகிஸ்தான் அணியும் டி20 உலக கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள அணியாக மதிப்பிடப்பட்டது.

சூப்பர் 12 சுற்றில் குரூப் 1-ல் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய 2 அணிகளும் சிறப்பாக ஆடி, இதுவரை ஆடிய 2 போட்டிகளிலும் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் டாப் 2 இடங்களில் உள்ளன. 

குரூப் 2-ல் பாகிஸ்தான் அணி மட்டும் தான் இதுவரை அபாரமாக ஆடி தொடர் வெற்றிகளை பெற்றுவருகிறது. இந்தியா, நியூசிலாந்து மற்றும் ஆஃப்கானிஸ்தான் ஆகிய 3 அணிகளுக்கு எதிராக ஆடிய போட்டிகளிலும் அபார வெற்றி பெற்று, அரையிறுதியில் ஒரு அடி எடுத்துவைத்துவிட்டது.

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான போட்டி நாளை நடக்கிறது. பாகிஸ்தானிடம் தோல்வியை தழுவிய இந்த 2 அணிகளும், நாளைய போட்டியில் மோதுகின்றன. அதன்பின்னர் இந்த 2 அணிகளும் மோதும் அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்றுவிடும். எனவே நாளைய போட்டி கிட்டத்தட்ட நாக் அவுட் போட்டியை போன்றது. நாளைய போட்டியில் ஜெயிக்கும் அணி தான் பாகிஸ்தானுக்கு அடுத்த இடத்தை பிடித்து, அரையிறுதிக்கு முன்னேறும்.

இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் ஆகிய 3 அணிகளும் உறுதியாக அரையிறுதிக்கு முன்னேற அதிக வாய்ப்புள்ளது. இவற்றுடன் நான்காவது அணியாக இந்தியா அல்லது நியூசிலாந்து அணி முன்னேறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Also Read: டி20 உலகக் கோப்பை 2021

இந்நிலையில், இந்த டி20 உலக கோப்பையில் எந்த 2 அணிகள் இறுதிப்போட்டியில் மோதும் என்று இங்கிலாந்து ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் கணித்துள்ளார். இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் ஆகிய 2 அணிகளும் டி20 உலக கோப்பை இறுதிப்போட்டியில் மோதும் என கணித்துள்ளார் ஸ்டோக்ஸ். இந்திய அணி இறுதிக்கும் வரும் என ஸ்டோக்ஸ் நம்பவில்லை.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை