WPL 2023: மும்பை இந்தியன்ஸ் vs குஜராத் ஜெயண்ட்ஸ் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸீ லெவன் டிப்ஸ்!
பிசிசிஐ சாா்பில் 5 மகளிா் அணிகள் பங்கேற்கும் மகளிர் ப்ரீமியா் லீக் டி20 லீக் தொடா் இன்று கோலாகலமாக மும்பையில் தொடங்குகிறது. முதல் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ்-குஜராத் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதுகின்றன. உலகின் முன்னணி கிரிக்கெட் வீராங்கனைகள் பங்கேற்று ஆடுவதால் மிகுந்த எதிா்பாா்ப்பை ஏற்படுத்தியுள்ளது டபிள்யுபிஎல்.
பல்வேறு ஆண்டுகள் திட்டமிடல், நடவடிக்கைக்கு பின் இந்தியாவில் மகளிா் கிரிக்கெட்டுக்கு மேலும் உத்வேகம் தரும் வகையில் டபிள்யுபிஎல் லீக் தொடா் நடத்தப்படுகிறது. முதல் லீக் தொடரில் மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சா்ஸ் பெங்களூரு, டில்லி கேபிடல்ஸ், யுபி வாரியா்ஸ், குஜராத் ஜெயன்ட்ஸ் அணிகள் பங்கேற்கின்றன.
மும்பை இந்தியன்ஸ் அணிக்கு இந்திய அணியின் கேப்டன் ஹா்மன்ப்ரீத் கௌா் கேப்டனமாக நியமிக்கப்பட்டுள்ளாா். நட்சத்திர வீராங்கனை ஸ்மிருதி மந்தனா பெங்களூரு அணிக்கும், ஆஸ்திரேலிய கேப்டன் மெக் லேனிங் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கும், மற்றொரு ஆஸி வீராங்கனை பெத்மூனி குஜராத் ஜெயன்ட்ஸ் அணிக்கும், ஆஸி. விக்கெட் கீப்பா் அலிஸா ஹீலி யுபி வாரியா்ஸ் அணிக்கும் கேப்டன்களாக நியமிக்கப்பட்டுள்ளனா்.
இந்நிலையில், நவி மும்பை டிஓய் பாட்டீல் மைதானத்தில் நடைபெறும் தொடக்க ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ்-குஜராத் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதுகின்றன. தொடக்க விழா மாலை 5.30 மணிக்கு நடைபெறுகிறது.
இதில் ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியில் ஹீலி மேத்யூஸ், யஸ்திகா பாட்டியா, நாட் ஸ்கைவர், அமிலியா கெர் ஆகியோர் பேட்டிங்கிலும், பூஜா வஸ்த்ரேகர், ஹீதர் க்ரெஹம் ஆகியோரும் இருப்பது அணிக்கும் பெரும் பலமாக பார்க்கப்பட்டுகிறது.
அதேசமயம் பெத் மூனி தலைமையிலான குஜராத் ஜெயண்ட்ஸ் அணியில் ஹர்லீன் டியோல், ஆஷ்லே கார்ட்னர், டேண்டா டோட்டின் ஆகியோர் பேட்டிங்கிலும், ஸ்நே ராணா, தயாலன் ஹெமலதா, அஷ்வினின் குமாரி ஆகியோரும் இருப்பதால் நிச்சயம் இப்போட்டியில் பரபரப்பு பஞ்சமிருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.
போட்டி தகவல்கள்
- மோதும் அணிகள் - மும்பை இந்தியன்ஸ் vs குஜராத் ஜெயண்ட்ஸ்
- இடம் - டிஒய் பாட்டீல் மைதானம், மும்பை
- நேரம் - இரவு 7.30 மணி
உத்தேச லெவன்
குஜராத் ஜெயண்ட்ஸ் - பெத் மூனி (கே), ஹர்லீன் தியோல், ஆஷ்லே கார்ட்னர், டீன்ட்ரா டோட்டின், சபினேனி மேகனா, சினே ராணா, ஜார்ஜியா வேர்ஹாம், தயாளன் ஹேமலதா, அஷ்வனி குமாரி, மான்சி ஜோஷி, மோனிகா படேல்.
மும்பை இந்தியன்ஸ் - யாஸ்திகா பாட்டியா , ஹேலி மேத்யூஸ், நடாலி ஸ்கிவர்-பிரண்ட், ஹர்மன்பிரீத் கவுர் (கே), அமிலியா கெர், அமன்ஜோத் கவுர், பூஜா வஸ்த்ரகர், ஹீதர் கிரஹாம், ஹுமைரா காசி, சைகா இஷாக், ஜின்டிமணி கலிதா.
ஃபேண்டஸி லெவன்
- விக்கெட் கீப்பர்கள் - பெத் மூனி, யாஸ்திகா பாட்டியா
- பேட்டர்ஸ் – ஹர்மன்பிரீத் கவுர், சோபியா டன்க்லி, ஹர்லீன் தியோல்
- ஆல்-ரவுண்டர்கள் - நடாலி ஸ்கைவர்-பிரண்ட், அமெலியா கெர், ஆஷ்லே கார்ட்னர்
- பந்துவீச்சாளர்கள் - ஜார்ஜியா வேர்ஹாம், பூஜா வஸ்த்ரகர், ஹீதர் கிரஹாம்