சிட்னி டெஸ்ட்: காயம் காரணமாக விலகும் ஆகாஷ் தீப்; பிரஷித் கிருஷ்ணா இடம்பிடிக்க வாய்ப்பு!

Updated: Thu, Jan 02 2025 09:02 IST
Image Source: Google

ஆஸ்திரேலியா - இந்திய அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகளை உள்ளடக்கிய பார்டர் கவாஸ்கர் கோப்பை கிரிக்கெட் தொடரானது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரில் இதுவரை நடந்து முடிந்துள்ள 4 போட்டிகளின் முடிவில் அஸ்திரேலிய அணி இரண்டு போட்டிகளிலும், இந்திய அணி ஒரு போட்டியிலும், ஒரு போட்டி டிராவிலும் முடிவடைந்துள்ளது. இதன்மூலம் ஆஸ்திரேலிய அணி 2-1 என்ற கணக்கில் தொடரில் முன்னிலையில் உள்ளது. 

இதனையடுத்து இத்தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் ஆஸ்திரேலியா - இந்தியா அணிகளுக்கு இடையேயான ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியானது நாளை (ஜனவரி 3) சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இப்போட்டியில் இந்திய அணி வெற்றிபெறும் பட்சத்தில் பார்டர் கவாஸ்கர் கோப்பையை தக்கவைக்கும். அதேசமயம் டிரா அல்லது தோல்வியைத் தழுவினால் இந்திய அணி தொடரை இழக்கும் என்பதால் இப்போட்டியின் மீதன எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. 

இதனால் இப்போட்டிக்காக இரு அணி வீரர்களும் திவீரமாக தயாராகி வருகின்றனர். இந்நிலையில் இப்போட்டியில் விளையாடும் ஆஸ்திரேலிய அணியின் பிளேயிங் லெவனை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது. அதன்படி தற்போது அறிவிக்கப்பட்டுள்ள பிளேயிங் லெவனில் ஆல் ரவுண்டர் மிட்செல் மார்ஷ் அணியில் இருந்து நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக பியூ வெப்ஸ்டர் பிளேயிங் லெவனில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் இப்போட்டிக்கு முன்னதாக இந்திய அணி பின்னடைவைச் சந்தித்துள்ளது. அதன்படி, நான்காவது டெஸ்ட் போட்டியின் போது இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஆகாஷ் தீப் காயமடைந்ததாக கூறப்பட்டது. இந்நிலையில் அவரது காயம் தீவிரமடைந்துள்ளதை அடுத்து சிட்னி டெஸ்ட் போட்ட்டிக்கான இந்திய அணியில் ஆகாஷ் தீப் இடம்பிடிக்க மாட்டார் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் இதனை இந்திய பயிற்சியாளர் கௌதம் கம்பீரும் உறுதிபடுத்தியதாக கூறப்படுகிறது.

இதன் காரணமாக சிட்னி டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனில் வேகப்பந்து வீச்சாளர் பிரஷித் கிருஷ்ணா சேர்க்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுதவிர்த்து நடப்பு பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரில் பெரிதளவில் தாக்கத்தை ஏற்படுத்த தவறிய ரிஷப் பந்த்தும் பிளேயிங் லெவனில் இருந்து நீக்கப்பட்டு துருவ் ஜூரெல் அணியில் சேர்க்கப்படுவார் என்றும் கூறப்படுகிறது. ஆனால் இதுகுறித்து எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. 

Also Read: Funding To Save Test Cricket

இந்திய டெஸ்ட் அணி: யஷஸ்வி ஜெய்ஸ்வால், கேஎல் ராகுல், ஷுப்மன் கில், விராட் கோலி, ரிஷப் பந்த், ரோஹித் சர்மா (கே), ரவீந்திர ஜடேஜா, நிதிஷ் குமார் ரெட்டி, ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ், ஆகாஷ் தீப், துருவ் ஜூரல், வாஷிங்டன் சுந்தர், சர்ஃபராஸ் கான், தேவ்தத் படிக்கல், அபிமன்யு ஈஸ்வரன், பிரசித் கிருஷ்ணா, ஹர்ஷித் ராணா, தனூஷ் கோட்டியான்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை