ஆஸ்திரேலியா - இந்திய அணிகளுக்கு இடையேயான பார்டர் கவாஸ்கர் கோப்பை கிரிக்கெட்  தொடரின் முதல் போட்டி பெர்த்தில் உள்ள் ஆப்டஸ் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 150 ரன்களில் ஆல் அவுட்டான நிலையில், ஆஸ்திரேலிய அணியும் 104 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, 46 ரன்கள் பின் தங்கியது. 

Advertisement

பின்னர் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய இந்திய அணி யஷஸ்வி ஜெய்ஸ்வால், விராட் கோலி ஆகியோரது சதங்கள் காரணமாக 487 ரன்களைக் குவித்து டிக்ளர் செய்வதாக அறிவித்தது. இதில் அதிகபட்சமாக யஷஸ்வி ஜெய்ஸ்வால் 161 ரன்களையும், விராட் கோலி 100 ரன்களையும் சேர்த்தனர். இதனால் ஆஸ்திரேலியாவுக்கு 534 ரன் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. பின்னர் கடின இலக்கை நோக்கி விளையாடிய ஆஸ்திரேலிய அணியில் டிராவிஸ் ஹெட் அதிரடியாக விளைடினார். 

Advertisement

இதில் டிரவிஸ் ஹெட் 89 ரன்களையும், மிட்செல் மார்ஷ் 47 ரன்களையும், அலெக்ஸ் கேரி 36 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் அனைவரும் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இதனா; அந்த அணி 238 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல் அவுட்டானது. இதன்மூலம் இந்திய அணி 295 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலையும் பெற்று அசத்தியுள்ளது.

இந்நிலையில் இப்போட்டியில் வெற்றிபெற்றதன் மூலம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் இந்திய அணி மீண்டும் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது. இப்போட்டிக்கு முன்னதாக ஆஸ்திரேலிய அணி 62.50 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருந்த நிலையில், தற்சமயம் 57.69 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டது. அதேசமயம் 58.33 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தில் இருந்த இந்திய அணி தற்போது 61.11 புள்ளிகளுடன் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது.

மேற்கொண்டு இலங்கை அணி 55.56 புள்ளிகளுடன் மூன்றாம் இடத்திலும் தொடர்கின்றது. அதேசமயம் இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை வென்றுள்ள நியூசிலாந்து அணி 54.55 புள்ளிகளுடன் நான்காம் இடத்திற்கு முன்னேறி அசத்தியுள்ளது. மேலும் கடந்த வாரம் நான்காம் இடத்தை பிடித்திருந்த தென் ஆப்பிரிக்க அணியானது தற்போது 54.17 புள்ளிகளுடன் 5ஆம் இடத்திற்கு பின் தங்கியுள்ளது. இதற்கடுத்த இடத்தில் இங்கிலாந்து அணி 40.79 புள்ளிகளுடன் 6ஆம் இடத்தில் உள்ளது. 

Also Read: Funding To Save Test Cricket

Advertisement

மேலும் பாகிஸ்தான் அணியானது 33.33 புள்ளிகளைப் பெற்று தற்போது 7ஆம் இடத்திலும், வங்கதேச அணி தற்போது 30.56 புள்ளிகளுடன் 8ஆம் இடத்திலும் உள்ள நிலையில், வெஸ் இண்டீஸ் அணியானது 18.52 புள்ளிகளுடன் தொடர்ந்து கடைசி இடத்திலும் நீடித்து வருகின்றனர். தற்போது இந்த பட்டியலில் முதல் 5 இடங்களில் உள்ள அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவி வருவதால் இதில் எந்த இரண்டு அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News