ஸ்டீவ் ஸ்மித் பெரிய ஸ்கோரை அடிப்பார் - பாட் கம்மின்ஸ் நம்பிக்கை!

Updated: Fri, Dec 13 2024 11:37 IST
Image Source: Google

ஆஸ்திரேலியா - இந்தியா அணிகளுக்கு இடையேயான பார்டர் கவாஸ்கர் கோப்பை கிரிக்கெட் தொடரானது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இதுவரை இரண்டு போட்டிகள் நடைபெற்று முடிந்துள்ள நிலையில், முதல் போட்டியில் இந்திய அணியும், இரண்டாவது போட்டியில் ஆஸ்திரேலிய அணியும் வெற்றிபெற்று 1-1 என்ற கணக்கில் தொடரை சமன்செய்து அசத்தியுள்ளன. 

இதைத்தொடர்ந்து ஆஸ்திரேலியா - இந்திய அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியானது பிரிஸ்பேனில் உள்ள காபா கிரிக்கெட் மைதானத்தில் நாளை (டிசம்பர் 14) நடைபெறவுள்ளது. இதில் ஏற்கெனவே இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பதிவுசெய்துள்ள நிலையில், இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெற்று தொடரில் முன்னிலைப் பெறும் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தில் பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது.

இந்நிலையில் உலகின் மிகச்சிறந்த டெஸ்ட் வீரர்களில் ஒருவராக கருதப்பட்ட ஸ்டீவ் ஸ்மித் சமீப காலங்களில் பேட்டிங்கில் பெரிதளவில் சோபிக்க முடியாமல் தடுமாறி வருகிறார். அதிலும் குறிப்பாக நடந்து வரும் பார்டர் கவாஸ்கர் கோப்பை கிரிக்கெட் தொடரிலும் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் விக்கெட்டுகளை இழந்தார். இதன் காரணமாக 2014ஆம் ஆண்டிற்கு பிறகு முதல் முறையாக டெஸ்ட் பேட்டர்களுக்கான தரவரிசையில் டாப் 10 இடத்தை இழந்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

இதனால் காபா டெஸ்ட் போட்டியிலாவது ஸ்டீவ் ஸ்மித் ஃபார்முக்கு திரும்புவாரா என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளது. இந்நிலையில், எதிர்வரும் போட்டிகளில் ஸ்டீவ் ஸ்மித் பெரிய ஸ்கோரை அடிப்பார் என ஆஸ்திரேலிய அணி கேப்டன் பாட் கம்மின்ஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், “நீங்கள் அவரது சாதனையைப் பாருங்கள், புள்ளிகள் விவரங்கள் அவர் ரன்களை சேர்க்க தவறி வருகிறர் என்று கூறுகின்றன.

குறிப்பாக இந்த ஆண்டு, அவர் வலைகளில் அருமையாகத் தெரிகிறார், மிகவும் கூர்மையாகத் தெரிகிறார், அவருக்கு நிறைய நேரம் கிடைத்ததைப் போல் தெரிகிறது. அவர் எப்பொழுதும் செய்வது போல் அனைத்து சரியான விஷயங்களையும் செய்கிறார். கடந்த ஆட்டத்தில் கூட எதிர்பாராத விதமாக லெக் சைடில் கேட்ச் ஆனார். அவர் இதுபோல் ஆட்டமிழப்பதை நீங்கள் அதை அதிகமாகப் பார்க்க முடியுமா என்று எனக்குத் தெரியவில்லை, எனவே ஒரு பெரிய ஸ்கோர் நிச்சயம் அடிப்பார் என்று நான் நம்புகிறேன்.

ஆஸ்திரேலியாவில் வெற்றி பெற்றதில் நிச்சயம் பெருமை உண்டு. எனேனில் இது எங்கள் சொந்த் மைதானங்களாகும். மேலும் நாங்கள் விளையாடி வளர்ந்த நிலைமைகள் இவை. இப்போதெல்லாம் கிரிக்கெட்டில் கடினமான விஷயம் வெளிநாட்டில் டெஸ்ட் தொடர்களை வெல்வது தான். எனவே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை உருவாக்க, நீங்கள் சொந்த மண்ணில் அனைத்து போட்டிகளிலும் வென்று, முடிந்தவரை வெளிநாடுகளில் சில வெற்றிகளைப் பெற முயற்சிக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார். 

Also Read: Funding To Save Test Cricket

ஆஸ்திரேலியா பிளேயிங் லெவன்: உஸ்மான் கவாஜா, நாதன் மெக்ஸ்வீனி, மார்னஸ் லாபுஷாக்னே, ஸ்டீவ் ஸ்மித், டிராவிஸ் ஹெட், மிட்செல் மார்ஷ், அலெக்ஸ் கேரி, பாட் கம்மின்ஸ் (கே), மிட்செல் ஸ்டார்க், நாதன் லையன், ஜோஷ் ஹேசில்வுட்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை