வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 2ஆவது போட்டியிலும் இந்தியா வெற்றி பெற்று 20 ஓவர் தொடரையும் கைப்பற்றியது. கொல்கத்தாவில் நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் ஆடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 186 ரன் குவித்தது.

Advertisement

ரி‌ஷப்பண்ட் 28 பந்தில் 52 ரன்னும் (7 பவுண்டரி, 1 சிக்சர்) , விராட் கோலி 41 பந்தில் 52 ரன்னும் (7 பவுண்டரி 1 சிக்சர்), வெங்கடேஷ் அய்யர் 18 பந்தில் 33 ரன்னும் (4 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்தனர். ரோஸ்டன் சேஸ் 3 விக்கெட் கைப்பற்றினார்.

Advertisement

பின்னர் விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 178 ரன் எடுத்தது. பரபரப்பான இந்த ஆட்டத்தில் இந்தியா 8 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ரோவ்மன் பாவெல் 36 பந்தில் 68 ரன்னும் (4 பவுண்டரி, 5 சிக்சர்), நிக்கோலஸ் பூரன் 41 பந்தில் 62 ரன்னும் (5 பவுண்டரி, 3 சிக்சர்) எடுத்தனர். புவனேஸ்வர் குமார், யசுவேந்திர சாஹல், பிஷ்னோய் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர்.

இந்நிலையில் வெற்றி குறித்து பேசியர் இந்திய கேப்டன் ரோஹித் சர்மா, “வெஸ்ட் இண்டீஸ் அதிரடி வீரர்களுக்கு எதிராக விளையாடும்போது எப்போதுமே சிறிது பயம் ஏற்படும். இறுதியில் வெற்றிகரமாக ஆட்டத்தை முடித்தது மகிழ்ச்சியானது. இது எளிதானதல்ல என்பது எங்களுக்குத் தெரியும்.

புவனேஸ்வர் குமார் நெருக்கடியான நேரத்தில் 19ஆவது ஓவரை சிறப்பாக வீசினார். அவரது அனுபவம் கைகொடுத்தது. பல ஆண்டுகளாக நாங்கள் அவரை மிகவும் நம்புகிறோம். எப்போதுமே 19ஆவது ஓவரில் அவர் சிறப்பாக பந்துவீசி வருகிறார்.

Advertisement

விராட் கோலியின் ஆட்டம் முக்கியமானது. ரி‌ஷப் பந்தும், வெங்கடேஷ் ஐயரும், அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன்களை குவித்தனர். வெங்கடேஷ் ஐயர் ஆட்டத்தில் முதிர்ச்சி இருப்பதை பார்க்க முடிகிறது. சில கேட்ச்களை தவறவிட்டது ஏமாற்றத்தை அளித்தது” என்று தெரிவித்தார்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News