பும்ரா இருந்திருந்தாலும் எங்களது இயல்பான ஆட்டத்தை தான் வெளிப்படுத்தி இருப்போம் - புவனேஷ்வர் குமார்!

Updated: Sat, Oct 29 2022 14:48 IST
Bhuvneshwar Kumar makes a BIG statement on India pacer ahead of IND vs SA clash (Image Source: Google)

இந்திய அணியின் முன்னணி வேகப்பந்துவீச்சாளர் பும்ரா காயம் காரணமாக டி20 உலக கோப்பை அணியில் இருந்து நீக்கப்பட்டார். அவருக்கு பதிலாக முகமது சமி உள்ளே எடுத்துவரப்பட்டு விளையாட வைக்கப்பட்டு வருகிறார். தற்போது வரை இந்திய அணிக்கு பும்ரா இல்லாத குறை தெரியவில்லை. அதற்கு ஏற்றவாறு அர்சதிப் சிங், புவனேஸ்வர் குமார் முகமது சமி ஆகியோர் அபாரமாக பந்துவீசி வருகின்றனர்.

இந்நிலையில் பும்ரா இருந்திருந்தால் இன்னும் கொஞ்சம் சிறப்பாக இந்திய அணி விளையாடி இருக்குமா? என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த புவனேஷ்வர் குமார், “பும்ரா ஒரு மிகச்சிறந்த பந்துவீச்சாளர். அவர் அணியில் இல்லாதது மிகப்பெரிய இழப்புதான். அதற்காக பும்ரா இல்லாததால் இன்னும் கொஞ்சம் அதிகமாக நாங்கள் செயல்பட வேண்டும் என்று அர்த்தம் இல்லை. பும்ரா இருந்திருந்தாலும் எங்களது இயல்பான ஆட்டத்தை தான் வெளிப்படுத்தி இருப்போம். இன்னும் அதிகம், இன்னும் அதிகம் என்று இருப்பதை இழந்து பறப்பதற்கு ஆசைப்பட மாட்டோம்” என்று தெரிவித்தார்.

மேலும், டெத் ஓவர்களில் அதிக ரன்கள் விட்டுகொடுப்பது பற்றி பேசிய அவர், “டி20 போன்ற போட்டிகளில் பவுலர்கள் ரன்களை விடுவது இயல்பு. சில போட்டிகளில் பவுலர்கள் ஆதிக்கம் இருக்கும். இது மைதானத்திற்கு மைதானம் மாறுபடும். உலகக்கோப்பை போன்ற தொடரின் போது நான் சமூக வலைதளங்களில் இருந்து முற்றிலும் விலகி இருப்பேன். வெளியில் என்னைப் பற்றி என்ன எழுதுகிறார்கள் என்பதை நான் தெரிந்து கொள்ள விரும்ப மாட்டேன். 

அன்றைய போட்டிக்கு என்ன தேவை என்பதில் மட்டுமே முழு கவனம் இருக்கும். ஏனெனில் கடந்த போட்டியில் என்ன நிலை என்பதை புரிந்து கொள்ளாமல் பலரும் பலவிதமாக எழுதுவார்கள். அதற்கு ஒருபோதும் இடம் கொடுக்க நான் விரும்பவில்லை. ஆகையால் விலகி நிற்கிறேன். மேலும் மெல்போர்னில் இந்த அளவிற்கு மைதானம் ஸ்விங் ஆகும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. அர்ஷதிப் மற்றும் நான் இருவரும் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினோம். அவர் மிகச் சிறப்பாக செயல்பட்டு ரன்களை கட்டுப்படுத்துவதோடு மட்டுமல்லாமல் விக்கெட்டுகளும் வீழ்த்தினார். இருவரும் வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டோம். மிகுந்த மகிழ்ச்சியுடன் இருக்கிறோம்” என்று தெரிவித்தார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை