IRE vs IND: டி20 கிரிக்கெட்டில் புதிய சாதனைப் படைத்த புவனேஷ்வர்குமார்!

Updated: Mon, Jun 27 2022 12:13 IST
Image Source: Google

இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக கடந்த 10 ஆண்டுகளாக பந்துவீச்சில் இருந்து வருபவர் புவனேஸ்வர் குமார். தனது ஸ்விங் பந்துவீச்சு மூலட்ம எதிரணிக்கு தூங்பா இரவுகளை பரிசலிக்கும் புவனேஸ்வர் குமார் தற்போது ஒருநாள் மற்றும் டி20 போட்டியில் மட்டும் விளையாடி வருகிறார்.

காயத்தால், தனது கிரிக்கெட் வாழ்க்கை பாதிக்கப்பட்டாலம், தற்போது பழைய ஃபார்மை மீட்டு எடுத்துள்ளார். தென் aaப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரில் கூட குறைவான ரன்களை விட்டு கொடுத்து 6 முக்கிய விக்கெட்டுகளை கைப்பற்றி தொடர் நாயகன் விருதை புவனேஸ்வர்குமார் தட்டி சென்றார். தற்போது அயர்லாந்து தொடரில் புவனேஸ்வர் குமார் துணை கேப்டனாக செயல்படுகிறார்.

இதே போன்று அயர்லாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் புவனேஸ்வர் குமார், தனது அற்புதமான ஸ்விங் பந்து மூலம், அயர்லாந்து கேப்டன் பால்பிரினை ஸ்டம்புகள் சிதற ஆட்டமிழக்க வைத்தார். இதன் மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் பவர்பிளேவில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய வீரர் என்ற சாதனையை புவனேஸ்வர் குமார் படைத்தார்.

மற்ற பந்துவீச்சாளர்கள் அதிக ரன்களை விட்டு கொடுத்தனர். ஹர்திக் பாண்டியா 2 ஓவருக்கு 26 ரன்களும், ஆவேண் கான் 2 ஓவருக்கு 22 ரன்களும், உம்ரான் மாலிக் ஒரு ஓவருக்கு 11 ரன்கள் விட்டு கொடுக்க, புவனேஸ்வர் குமார் 3 ஓவருக்கு 16 ரன்கள் விட்டு கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார்.புவனேஸ்வர் குமார் டி20 உலகக் கோப்பையில் துருப்பு சீட்டு பந்துவீச்சாளராக இருப்பார் என்று கவாஸ்கரும் நம்பிக்கை தெரிவித்தார்.

பவர்பிளேவில் அதிக விக்கெட்டுகள்

  • புவனேஸ்வர் குமார் - 34 விக்கெட்
  • டிம் சௌதி - 33 விக்கெட்
  • சாமூவெல் பத்ரி- 33 விக்கெட்
  • ஷகிபுல் ஹசன்- 27 விக்கெட்
  • ஹேசல்வுட் - 26 விக்கெட்
TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை