கம்பேக் கொடுத்த புவி; கவுரவித்த ஐசிசி!
இந்திய கிரிக்கெட் அணியின் பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமாரை மார்ச் மாதத்திற்கான சிறந்த சர்வதேச கிரிக்கெட் வீரர்க தேர்வு செய்துள்ளது சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி.
மாதம் தோறும் சிறப்பான பங்களிப்பை கிரிக்கெட் விளையாட்டில் அர்ப்பணிக்கும் சிறந்த வீரர்களை அடையாளம் கண்டு, அவர்களை கவுரப்படுத்தும் விதமாக ஐசிசி விருது வழங்கி வருகிறது. இதில் இங்கிலாந்து தொடருக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடரில் சிறப்பாக பந்து வீசிய புவனேஷ்வர் குமாருக்கு மார்ச் மாதத்திற்கான சிறந்த வீரர் விருது கிடைத்துள்ளது.
இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் 6 விக்கெட்டுகளும், டி20 தொடரில் 4 விக்கெட்டுகளும் அவர் வீழ்த்தி இருந்தார். இதன் மூலம் இந்த விருது அவருக்கு கொடுக்கபட்டுள்ளது. அவருடன் போட்டியில் ஆப்கானிஸ்தான் நாட்டின் ரஷீத் கான் மற்றும் ஜிம்பாப்வே அணியின் வில்லியம்ஸும் இடம் பிடித்திருந்தனர்.
மகளிர் கிரிக்கெட்டில் தென் ஆப்பிரிக்க அணியின் லிசெல் லீ மார்ச் மாதத்திற்கான சிறந்த வீராங்கனையாக தேர்வாகியுள்ளார். இதற்கு முன்னதாக பிப்ரவரி மாதம் அஷ்வினும், ஜனவரி மாதம் ரிஷப் பண்டும் சிறந்த ஐசிசி வீரருக்கான விருதுகளை வென்றிருந்தனர்.