SA vs IND: முதல் போட்டியில் ரசிகர்களுக்கு அனுமதி மறுப்பு?

Updated: Mon, Dec 20 2021 16:26 IST
Image Source: Google

ரசிகர்கள் அனைவரும் ஆவலோடு காத்திருந்த இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி டிசம்பர் 26ஆம் தேதி பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியாக நடைபெற இருந்தது. இந்த போட்டிக்கான அறிவிப்பு வெளியானதிலிருந்து பல தடைகள் ஏற்பட்டு வருகின்றன. 

குறிப்பாக இந்த தென் ஆப்பிரிக்கா தொடருக்கான அறிவிப்பு வெளியான நேரத்தில் அங்கு ஓமைக்கிரான் வைரஸ் கண்டறியப்பட்டது. அதன் காரணமாக தென் ஆபிரிக்காவிற்கு செல்லும் வான்வழி போக்குவரத்து தடை செய்யப்பட்டிருந்தன.

அந்த பிரச்சினை ஓய்ந்த பிறகு அடுத்ததாக மீண்டும் இந்த தொடருக்கான அட்டவணையும் மாற்றி அமைக்கப்பட்டது. முன்னதாக இந்த தென் ஆப்ரிக்கா தொடரில் டி20 தொடரும் நடைபெற இருந்தது. இந்நிலையில் அந்த தொடரை ரத்து செய்து 3 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் மட்டும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

இப்படி அடுத்தடுத்து தடைகளை சந்தித்த இந்த தொடரானது இன்னும் ஒரு வாரத்தில் தொடங்கும் என்று ரசிகர்கள் உற்சாகமாக இருந்த நிலையில் தற்போது மீண்டும் ஒரு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதன்படி இரு அணி வீரர்களும் கடுமையான பயோ பபுளில் இருப்பதனால் போட்டி எந்த விதத்திலும் பாதிக்கக்கூடாது என்பதனால் ரசிகர்கள் இன்றி முதல் போட்டியானது நடைபெறலாம் என்று கூறப்பட்டுள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் வரை மைதானத்தில் குறைந்தளவு ரசிகர்களை வைத்து போட்டியை நடத்தலாம் என்று கூறப்பட்ட நிலையில் தற்போது வெளியான அறிக்கையின்படி ஓமைக்கிரான் வைரஸ் பரவல் தீவிரத்தின் காரணமாகவும், முன்னெச்சரிக்கை காரணமாகவும் மைதானத்தில் ரசிகர்கள் வர அந்நாட்டு நிர்வாகம் தடை செய்து உள்ளதால் தற்போது முதல் போட்டியானது ரசிகர்கள் இன்றி நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை