ENG vs IND, 5th Test: பிராட்டை அசிங்கப்படுத்திய நடுவர் - காணொளி!

Updated: Tue, Jul 05 2022 14:11 IST
Image Source: Google

இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5வது டெஸ்ட் போட்டி இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இந்த போட்டியில் வெற்றி தோல்வியை விட, பல சுவாரஸ்ய நிகழ்வுகள், சண்டைகள், சர்ச்சைகள் ஏற்பட்டன.

விராட் கோலி - ஜானி பேர்ஸ்டோ இடையேயான வாக்குவாதம் பெரும் அளவில் பேசப்பட்டது. இந்நிலையில் இந்த வரிசையில் தற்போத் ஸ்டூவர்ட் பிராட் இணைந்துள்ளார். இங்கிலாந்து அணியின் முதல் இன்னிங்ஸ் பேட்டிங்கில் பிராட் வெறும் 5 பந்துகளை தான் சந்தித்தார். ஆனால் இந்த குறுகிய நேரத்தில் அம்பயரிடம் சண்டை போட்டுள்ளார்.

ஸ்டூவர்ட்டிற்கு பும்ரா தொடர்ந்து ஷார்ட் பால்களாக வீசினார். அதனை அவர் பவுண்டரிக்கு அடிக்க முயன்று ஏமாற்றமே மிஞ்சியது. இதனால் கடுப்பான பிராட், அம்பயரிடம் வைட் கொடுங்கள், இதனை ஏற்க முடியாது என கோபத்துடன் கூறியுள்ளார். 

இதற்கு பதிலளித்த நடுவர் ரிச்சர்ட் கெட்டில்போரஃப், அம்பயரிங்கை நாங்கள் செய்துக்கொள்கிறோம்.. நீங்கள் பேட்டிங் செய்வதை மட்டும் பார்த்தால் போதும்.. புரிந்ததா? எனக்கேட்டார்.

இந்த பதிலுக்கு பிராட் மீண்டும் சத்தமாக பேச, கோபமடைந்த நடுவர் நீங்கள் பேட்டிங் செய்ய போகவில்லை என்றால் மீண்டும் ஒரு பெரிய பிரச்சினையில் சிக்க நேரிடும். வாயை மூடிக்கொண்டு போய் வேலையை செய்யுங்கள் என திட்டினார். இந்த காணொளி தற்போது இணையத்தில் பரவி வருகிறது.

 

ஸ்டூவர்ட் பிராட்டிற்கு இந்த போட்டி ஒரு மறக்க முடியாத அனுபவமாக மாறியுள்ளது. டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 550வது விக்கெட்டை இந்த போட்டியில் தான் எடுத்து பெருமை பெற்றார். ஆனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரே ஓவரில் 35 ரன்களை வாரி வழங்கிய வீரர் என்ற விமர்சனத்தையும் சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை