IND vs ENG: இரண்டாவது போட்டிக்கான இங்கிலாந்து பிளேயிங் லெவன் அறிவிப்பு!

Updated: Fri, Jan 24 2025 19:27 IST
Image Source: Google

இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் விளையாடவுள்ளது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரானது கடந்த ஜனவரி 22தேதி தொடங்கியது. இத்தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது.

இதனையடுத்து இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி நாளை (ஜனவரி 25) சென்னையில் உள்ள எம்ஏ சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் இந்திய அணி ஏற்கெனவே முதல் போட்டியில் வென்றுள்ள உத்வேகத்துடன் இப்போட்டியை எதிர்கொள்ளவுள்ளது. மறுபக்கம் முந்தைய தோல்விக்கு பதிலடி கொடுக்கும் முனைப்பில் இங்கிலாந்து அணி இப்போட்டியில் விளையாடவுள்ளது. 

இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. மேலும் இப்போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றனர். இந்நிலையில் இப்போட்டியில் விளையாடும் இங்கிலாந்து அணியின் 12 பேர் கொண்ட அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது. அதன்படி இந்த அணியில் ஒரு மாற்றத்தை இங்கிலாந்து நிர்வாகம்செய்துள்ளது. 

முந்த ஒருநாள் போட்டியில் முதல் ஓவரிலேயே ரன்களை வாரி வழங்கிய கஸ் அட்கின்சனுக்கு இப்போட்டில் வாய்ப்பு வழங்கப்படவில்லை. அவருக்கு பதிலாக பிரைடன் கார்ஸ் பிளேயிங் லெவனில் சேர்க்கப்படுவார் என்றும் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. இதுதவிர்த்து இப்போட்டியின் 12ஆவது வீரராக ஜேமி ஸ்மித் பெயர் இடம்பிடித்துள்ளது. இதனால் நாளை ஆட்டம் தொடங்குவதற்கு முன்னரும் சில மாற்றம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

இங்கிலாந்து அணி: பென் டக்கெட், பில் சால்ட், ஜோஸ் பட்லர் (கேப்டன்), ஹாரி ப்ரூக், லியாம் லிவிங்ஸ்டோன், ஜேக்கப் பெத்தேல், ஜேமி ஓவர்டன், பிரைடன் கார்ஸ், ஜோஃப்ரா ஆர்ச்சர், ஆதில் ரஷீத், மார்க் வுட், ஜேமி ஸ்மித்(12ஆவது வீரர்).

Also Read: Funding To Save Test Cricket

இந்திய டி20 அணி: சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), அபிஷேக் சர்மா, திலக் வர்மா, ஹர்திக் பாண்ட்யா, ரிங்கு சிங், நிதிஷ் குமார் ரெட்டி, அக்சர் படேல் (துணை கேப்டன்), ஹர்ஷித் ராணா, அர்ஷ்தீப் சிங், முகமது ஷமி, வருண் சக்ரவர்த்தி, ரவி பிஷ்னோய். .

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை