ENG vs IND: கபில் தேவ்வின் சாதனையை முறியடித்த பும்ரா!

Updated: Mon, Sep 06 2021 19:40 IST
Image Source: Google

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய அணி 368 ரன்களை இலக்காக இங்கிலாந்திற்கு நிர்ணயித்துள்ளது. 

அதன்படி இரண்டாவது இன்னிங்ஸை விளையாடி வரும் இங்கிலாந்து அணிக்கு ரோரி பர்ன்ஸ் - ஹாசீப் ஹமீத் இணை அபாரமான தொடக்கத்தைக் கொடுத்தது. பின் ரோரி பர்ன்ஸ் 50 ரன்களில் ஆட்டமிழக்க, அவரைத் தொடர்ந்து ஹாசீப் ஹமீதும் 63 ரன்களில் பெவிலியன் திரும்பினார். 

பின்னர் வந்த வீரர்களும் இந்திய அணி பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகலை இழந்தனர். இதில் ஒல்லி போப் மற்றும் ஜானி பேர்ஸ்டோவ் ஆகியோரது விக்கெட்டுகளை ஜஸ்பிரித் பும்ரா கைப்பற்றினார். 

இதன் மூலம் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 100ஆவது விக்கெட்டையும் ஜஸ்பிரித் பும்ரா கைப்பற்றி அசத்தினார். மேலும் குறைந்த டெஸ்ட் போட்டியில் 100 விக்கெட்டுகளை வீழ்த்திய முன்னாள் கேப்டன் கபில் தேவ்வின் சாதனையையும் பும்ரா முறியடித்துள்ளார்.

Also Read: சிட்னி சிக்சர்ஸில் மீண்டும் ஓராண்டு ஒப்பந்தமான பிராத்வைட்!

முன்னதாக கபில் தேவ் 25 டெஸ்ட் போட்டிகளில் 100 விக்கெட்டுகளை வீழ்த்தியதே சாதனையாக இருந்தது. ஆனால் பும்ரா 24 போட்டிகளிலேயே அதனை எட்டி, புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை