பும்ரா, ஷமி, சிராஜ் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர் - ரோஹித் சர்மா!

Updated: Sat, Nov 18 2023 20:30 IST
பும்ரா, ஷமி, சிராஜ் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர் - ரோஹித் சர்மா! (Image Source: Google)

கடந்த அக்டோபர் 5ஆம் தேதி தொடங்கிய உலகக் கோப்பைத் தொடர் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நாளை நடைபெறும் இறுதிப்போட்டியில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன. 10 ஆண்டுகளாகத் தொடரும் ஐசிசி கோப்பைக்கானத் தேடலை பூர்த்தி செய்யும் நோக்கத்தோடு இந்திய அணியும், 6-வது முறையாக உலகக் கோப்பையை வசமாக்கும் முனைப்போடு ஆஸ்திரேலிய அணியும் களம் காண்கின்றன.

இந்தநிலையில் இப்போட்டிக்கு முன் ரோஹித் சர்மா செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், “உலகக்கோப்பை தொடரின் தொடக்க போட்டிகளில் முகமது ஷமியை பிளேயிங் லெவனில் தேர்வு செய்ய முடியவில்லை. ஆனால் சிராஜ் மற்றும் பும்ராவுடன் அவர் தொடர்ந்து உதவி செய்து வந்தார். அதேபோல் முகமது ஷமி பெஞ்ச் செய்யப்பட்ட போது, அவரை ஏன் பிளேயிங் லெவனில் சேர்க்கவில்லை என்று தொடர்ந்து விளக்கம் அளித்து வந்தோம். 

இதனால் முகமது ஷமி தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வந்தார். ஒரு கட்டத்தில் அவருக்கான வாய்ப்பு வந்த போது, அவரின் ஆட்டத்தை அனைவருக்கும் காட்டியுள்ளார். அதேபோல் நாளைய போட்டிக்கான பிளேயிங் லெவனில் இன்னும் முடிவு செய்யவில்லை. பிட்சின் தன்மையை பார்த்துவிட்டு, எதிரணியின் பலம் மற்றும் பலவீனத்தை பொறுத்து வீரர்களை தேர்வு செய்வோம்.

அஹ்மதாபாத் பிட்சில் சிறியளவில் புற்கள் உள்ளது. பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் ஆடிய பிட்ச் ஸ்லோவாக இருந்தது. அதனால் என்னுடைய புரிதல் அடிப்படையில், இதுவும் அதேபோல் இருக்கும். அதேபோல் கொஞ்சம் வானிலையிலும் மாற்றம் உள்ளது. அதனால் நாளை பனிப்பொழிவு எந்த அளவிற்கு இருக்கும் என்பது தெரியவில்லை. அதேபோல் போட்டியின் முடிவில் நிச்சயம் டாஸ் எந்த பங்கும் வகிக்காது. 

நாளைய ஆட்டத்தில் அஸ்வின் இருப்பாரா என்பதை இன்னும் முடிவு செய்யவில்லை. நாளை மீண்டும் ஒருமுறை பிட்சை பார்த்தபின் தான் முடிவு எடுப்போம். நங்களின் 12 அல்லது 13 வீரர்களை இறுதி செய்துவிட்டோம். என்னை பொறுத்தவரை அன்றைய நாளில் சிறந்த கிரிக்கெட்டை ஆடும் நிச்சயம் வெற்றிபெறும். கடந்த 10 போட்டிகளில் நாங்கள் என்ன செய்தோம் என்பது தேவையில்லை. அந்த போட்டிகளில் வென்ற மன உறுதியை மட்டும் எடுத்துக் கொண்டு வெற்றிக்காக விளையாட வேண்டும்.

எனது ஆட்டத்தை பொறுத்தவரை, அட்டாக்கிங் பாணியிலான ஆட்டத்தை விளையாட உலகக்கோப்பைக்கு முன்பே நினைத்திருந்தேன். ஆனால் அது எடுபடுமா என்பது தெரியாது. எனக்கு கிடைத்த குறைந்தபட்ச சுதந்திரத்தை கொண்டு விளையாடினே. அதேபோல் இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் வேறு மாதிரியான ஆட்டத்தை வெளிப்படுத்தினேன். சீனியர் வீரர்கள் அப்படிதான் விளையாட வேண்டும். எனது திட்டத்தை மாற்றினேன். இறுதிப்போட்டி என்பதால் அதிகமாக ஆர்வம் கொள்ளவோ, அழுத்தத்தை எடுத்து கொள்வதோ தேவையில்லை” என்று தெரிவித்தார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை