டி20 உலகக்கோப்பை: பும்ராவின் காயம் குறித்து ரோஹித்தின் கருத்து!

Updated: Sat, Oct 15 2022 19:40 IST
Image Source: Google

டி20 உலக கோப்பை வரும் நாளை முதல் நவம்பர் 13 வரை ஆஸ்திரேலியாவில் நடக்கிறது. டி20 உலக கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள அணியாக பார்க்கப்படும் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு எதிராக பயிற்சி போட்டிகளில் விளையாடுகிறது.

இந்த டி20 உலக கோப்பையில்  ஜடேஜா, பும்ரா ஆகியோர் காயம் காரணமாக ஆடாதது இந்திய அணிக்கு பின்னடைவு. குறிப்பாக பும்ரா ஆடாதது பெரும் பின்னடைவு. நன்றாக பவுன்ஸாகும் ஆஸ்திரேலிய ஆடுகளங்களில் பும்ரா பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பார். ஆட்டத்தின் எந்த சூழலிலும் அபாரமாக பந்துவீசக்கூடிய ஜஸ்ப்ரித் பும்ரா ஆடாதது பெரும் பின்னடைவு.

இந்நிலையில் காயம் காரணமாக விலகிய பும்ராவுக்குப் பதிலாக இந்திய அணியில் மற்றொரு வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக பிசிசிஐ அறிவித்தது. 

இதுகுறித்து பேசிய கேப்டன் ரோஹித் சர்மா, “பும்ராவின் காயம் பற்றி பல நிபுணர்களிடம் விசாரித்தோம். யாரும் அவரை விளையாட பரிந்துரைக்கவில்லை. அந்தளவுக்கு காயம் உள்ளது. டி20 உலகக் கோப்பை முக்கியம்தான். ஆனால், அதைவிட அவரது அவரது கிரிக்கெட் வாழ்கை முக்கியம். அவருக்கு இப்போதுதான் 27-28 வயதாகிறது. அவர் விளையாட வேண்டிய கிரிக்கெட் இன்னும் அதிகமிருக்கிறது. அதனால் அவர் விவகாரத்தில் ரிஸ்க் எடுக்க முடியாது. அவரை மிஸ் செய்கிறோம் என்பதில் எந்தவித மாற்றுக்கருத்தும் இல்லை” என்று தெரிவித்துள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை