பாகிஸ்தான் தொடருக்கான் ஆஸி டெஸ்ட் அணி அறிவிப்பு!

Updated: Tue, Feb 08 2022 11:32 IST
Image Source: Google

பாகிஸ்தானில் கிரிக்கெட் விளையாட நியூசிலாந்து, இங்கிலாந்து ஆகிய அணிகள் மறுத்ததால் ஆஸ்திரேலிய அணியும் தொடரை ரத்து செய்யுமா என பாகிஸ்தான் ரசிகர்கள் பயந்திருந்தார்கள். 

இந்நிலையில் பாகிஸ்தானுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொள்வதாக கிரிக்கெட் ஆஸ்திரேலியா சமீபத்தில் அறிவித்துள்ளது. 

கடந்த 1998-க்குப் பிறகு ஆஸ்திரேலிய அணி பாகிஸ்தானுக்குச் செல்வதால் இத்தொடரை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள். மார்ச் மாதம் பாகிஸ்தானுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டெஸ்ட், 3 ஒருநாள், 1 டி20 என மூன்று தொடர்களிலும் விளையாடுகிறது ஆஸ்திரேலிய அணி. 

டெஸ்ட் தொடர் மார்ச் 4 அன்றும் ஒருநாள் தொடர் மார்ச் 29 அன்றும் தொடங்குகின்றன. டி20 ஆட்டம் ஏப்ரல் 5 அன்று நடைபெறுகிறது. முதல் டெஸ்ட், ஒருநாள் தொடர், டி20 ஆட்டம் ஆகியவை ராவல்பிண்டியிலும், கராச்சி, லாகூரில் தலா ஒரு டெஸ்டும் நடைபெறுகின்றன. 

இந்நிலையில் பாட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணியில் வார்னர், காவாஜா, ஹசில்வுட் போன்ற நட்சத்திர வீரர்கள் இடம்பிடித்துள்ளனர்.

ஆஸ்திரேலிய அணி: பாட் கம்மின்ஸ் (கேட்ச்), ஆஷ்டன் அகர், ஸ்காட் போலண்ட், அலெக்ஸ் கேரி, கேமரூன் கிரீன், மார்கஸ் ஹாரிஸ், ஜோஷ் ஹேசில்வுட், டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்கிலிஸ், உஸ்மான் கவாஜா, மார்னஸ் லாபுசாக்னே, நாதன் லயன், மிட்செல் மார்ஷ், மைக்கேல் நெசர், ஸ்டீவ் ஸ்மித் (விசி) , மிட்செல் ஸ்டார்க், மிட்செல் ஸ்வெப்சன், டேவிட் வார்னர்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை