கடைசி விக்கெட்டுக்கு 100 ரன்கள் பார்ட்னர்ஷிப்; புதிய சாதனை படைத்த க்ரீன், ஹசில்வுட்!

Updated: Fri, Mar 01 2024 14:30 IST
கடைசி விக்கெட்டுக்கு 100 ரன்கள் பார்ட்னர்ஷிப்; புதிய சாதனை படைத்த க்ரீன், ஹசில்வுட்! (Image Source: Google)

நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்துவரும் ஆஸ்திரேலிய அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடிவருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி வெலிங்டனில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி நியூசிலாந்து அணியின் பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். 

ஆனாலும் கடைசிவரை களத்தில் இருந்த கேமரூன் க்ரீன் அபாரமான ஆட்டத்த வெளிப்படுத்து சதமடித்ததுடன், 23 பவுண்டரி, 5 சிக்சர்கள் என 174 ரன்களைக் குவித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இதன்மூலம் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 383 ரன்களைச் சேர்த்து வலுவான நிலையில் ஆல் அவுட்டானது. இந்நிலையில் இப்போட்டியில் ஆஸ்திரேலிய அணி 9 விக்கெட் இழப்பிற்கு 267 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது. 

அதன்பின் ஜோடி சேர்ந்த கேமரூன் க்ரீன் மற்றும் ஜோஷ் ஹசில்வுட் இணை கடைசி விக்கெட்டிற்கு 116 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணி வலுவான ஃபினீஷிங்கைக் கொடுத்தனர். இதன்மூலம் ஆஸ்திரேலிய அணிக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் 10ஆவது விக்கெட்டிற்கு அதிக ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நான்காவது ஜோடி என்ற சாதனையைப் படைத்துள்ளனர். மேலும் நியூசிலாந்துக்கு எதிராக அடிக்கப்பட்ட அதிகபட்ச கடைசி விக்கெட் பார்ட்னர்ஷிப்பாகவும் இது அமைந்தது. 

முன்னதாக ஆஸ்திரேலிய அணியின் ஜேசன் கில்லெஸ்பி மற்றும் கிளென் மெக்ராத் ஆகியோர் இணைந்து கடந்த 2004ஆம் ஆண்டு நியூசிலாந்து அணிக்கு எதிராக கடைசி விக்கெட்டிற்கு 114 ரன்கள் சேர்த்ததே சாதனையாக பார்க்கப்பட்டது.  அதனைத் தற்போது கேமரூன் க்ரீன் - ஜோஷ் ஹசில்வுட் இணை 116 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து புதிய சாதனை படைத்துள்ளார். மேலும் ஆஸ்திரேலிய அணி தரப்பில் 10ஆவது விக்கெட்டிற்கு 100 அல்லது அதற்கு மேற்பட்ட ரன்களை குவிப்பது இது ஆறாவது முறையாகும்.

அதன்பின் முதல் இன்னிங்ஸைத் தொடர்ந்து நியூசிலாந்து அணியில் நட்சத்திர வீரர்கள் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனர். இதனால் நியூசிலாந்து அணி 179 ரன்களுக்கு ஆ அவுட்டானதுடன், 204 ரன்கள் பின்னிலையையும் சந்தித்தது. இதையடுத்து வலுவான முன்னிலையுடன் ஆஸ்திரேலிய அணியானது தங்களது இரண்டாவது இன்னிங்ஸைத் தொடர்ந்து வருகிறது. 

 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை