டி20 உலகக்கோப்பை: வார்னர் குறித்து ஆரோன் ஃபிஞ்ச்!

Updated: Mon, Nov 15 2021 12:48 IST
Can't believe people wrote Warner off, it's like 'poking a bear': Finch (Image Source: Google)

துபாயில் நேற்று நடந்த டி20 போட்டியின் இறுதி ஆட்டத்தில் நியூஸிலாந்தை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை முதல் முறையாகக் கைப்பற்றியது ஆஸ்திரேலிய அணி.

அதிரடி வீரர் டேவிட் வார்னர் இந்த டி20 உலகக் கோப்பை போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்காக 289 ரன்கள் சேர்த்து தொடர் நாயகன் விருது வென்றார். இதன் மூலம் டி20 உலகக் கோப்பை போட்டியில் ஆஸ்திரேலியாவுக்காக அதிக ரன்கள் சேர்த்த வீரர் எனும் சாதனையையும் படைத்தார். 

ஆனால், ஐபிஎல் டி20 தொடரின் 2ஆவது சுற்றில் சன்ரைசர்ஸ் அணியின் கேப்டனாக இருந்த டேவிட் வார்னரின் திறமைையைக் குறைத்து மதிப்பிட்டு அவருக்கு அழுத்தம் கொடுத்து கேப்டன் பதவி பறிக்கப்பட்டது. சில போட்டிகளில் சொதப்பினார் என்பதற்காக, டேவிட் வார்னருக்கு பேட்டிங் வரவில்லை, ஃபார்மில் இல்லை எனக் கூறி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அவரை ஐபிஎல் தொடரில் அணியிலிருந்து நீக்கி அமரவைத்தது.

ஏறக்குறைய அணியிலிருந்தே நீக்கி, பெஞ்ச்சில் அமரவைத்தது. ஆனால், தன்னுடைய பேட்டிங் ஃபார்ம் எப்போதும் குறையவில்லை, அது சிறிய சறுக்கல் என்பதை உலகக் கோப்பை தொடரில் வார்னர் நிரூபித்துள்ளார்.

டேவிட் வார்னர் குறித்து ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் பின்ச் அளித்த பேட்டியில், ''டி20 உலகக் கோப்பை தொடங்க 2 வாரங்களுக்கு முன் வார்னருக்கு பேட்டிங் திறமையைக் குறைத்து மதிப்பிட்டு செய்த செயல்களை என்னால் நம்பமுடியவில்லை.

Also Read: T20 World Cup 2021

அவ்வாறு செய்வது ஒருவரைக் கடும் கோபத்துக்கு உள்ளாக்குவது போலாகும். வார்னரை உசுப்பேற்றிவட்டார்கள். அவர் சும்மா இருப்பாரா? மிகப்பெரிய ஸ்கோரை உலகக் கோப்பையில் அடித்து, அணிக்குப் பெருமை தேடித்தந்துள்ளார். இந்த உலகக் கோப்பையில் சிறப்பாகச் செயல்பட்ட வீரர்களால் நான் பெருமைப்படுகிறேன்” எனத் தெரிவித்தார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை