ரோஹித் சர்மாவிற்கு பதக்கத்தை வழங்கிய ஸ்ரேயாஸ் ஐயர்!
நடப்பு ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் 37ஆவது லீக் போட்டியானது இன்று கொல்கத்தா நகரில் கோலாலமாக நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியும், டெம்பா பவுமா தலைமையிலான தென் ஆப்பிரிக்க அணியும் மோதின. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 326 ரன்களை குவித்தது. இந்திய அணி சார்பாக அதிகபட்சமாக விராட் கோலி 101 ரன்கலையும், ஷ்ரேயாஸ் ஐயர் 77 ரன்களையும் குவித்து அசத்தினர்.
பின்னர் 327 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய தென் ஆப்பிரிக்க அணியானது 27.1 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 83 ரன்கள் மட்டுமே குவித்தது. இதன் காரணமாக இந்திய அணி 24 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி சார்பாக ஜடேஜா 5 விக்கெட்களையும், ஷமி மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினர்.
இந்த உலகக்கோப்பை தொடரின் ஒவ்வொரு ஆட்டத்திலும் சிறப்பாக பீல்டிங் செய்யும் இந்திய வீரருக்கு பிசிசிஐ சார்பில் பதக்கம் வழங்கப்படுகிறது. அதன்படி நேற்றைய ஆட்டத்தில் சிறந்த பீல்டராக ரோகித் சர்மா தேர்வு செய்யப்பட்டுள்ளார். கேப்டன்ஷிப் மட்டுமின்றி பீல்டிங்கிலும் சிறப்பாக செயல்பட்டதால் அவர் தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு, முந்தைய ஆட்டத்தில் சிறந்த பீல்டர் விருது பெற்ற ஸ்ரேயாஸ் ஐயர் தங்கப்பதக்கம் அணிவித்து கவுரவித்தார்.