ஆஸ்திரேலிய அணியை வழிநடத்தும் அலேக்ஸ் கேரி!

Updated: Tue, Jul 20 2021 10:40 IST
Carey to lead Australia in 1st ODI against Windies (Image Source: Google)

ஆரோன் ஃபிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி, வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் முதலில் நடைபெற்ற 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை வெஸ்ட் இண்டீஸ் அணி 3-2 என்ற கணக்கில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி தொடரைக் கைப்பற்றியது.

இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டி இன்று பார்போடாஸில் நடைபெறுகிறது. இப்போட்டிக்காக இரு அணி வீரர்களும் கடுமையாக பயிற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். 

இதற்கிடையில் வெஸ்ட் இண்டீஸ் அணியுடடான 5ஆவது டி20 போட்டியின் போது ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் ஃபிஞ்ச் காயமடைந்தார். அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு ஒருவார காலமாவது ஓய்வு தேவை என்று தெரிவித்திருந்தனர். 

இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான ஒருநாள் தொடரில் யார் ஆஸ்திரேலிய கேப்டனாக செயல்படுவர் என்ற கேள்வி எழுந்தது. இதையடுத்து மேத்யூ வேட், ஹென்ரிக்ஸ் ஆகியோர் அடுத்த கேப்டனாக பார்க்கப்பட்டது.

இந்நிலையில், வெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் தொடருக்கான ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாக அலேக்ஸ் கேரி நியமிக்கப்பட்டுள்ளார். இத்தகவலை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் உறுதிசெய்துள்ளது. 

முன்னதாக அலெக்ஸ் கேரி, பாட் கம்மின்ஸ் ஆகிய இருவரும் கடந்த 3 வருடங்களாக ஆஸ்திரேலிய அணியின் துணைக்கேப்டனாக செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை