CT 2025: நியூசிலாந்து போட்டியில் விளையாடும் மஹ்முதுல்லா - வலிமை பெறும் வங்கதேசம்!
பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நடைபெற்ற இரண்டாவது லீக் போட்டியில் இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் இந்திய அணியானது 6 விக்கெட் வித்தியாச்த்தில் வெற்றிபெற்று அசத்தியது.
அதன்படி இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணியில் டாப் ஆர்டர் வீரர்கள் சோபிக்க தவறிய நிலையில் மிடில் ஆர்டரில் தாவ்ஹித் ஹிரிடோர் மற்றும் ஜக்கர் அலியின் அபாரமான பார்ட்னர்ஷிப் மூலம் அந்த அணி 228 ரன்களைச் சேர்த்தது. இதில் தாவ்ஹித் ஹிரிடோய் தனது சதத்தை பதிவுசெய்த நிலையில், ஜக்கர் அலி அரைசதம் கடந்து அசத்தனர். பின்னர் பந்துவீச்சிலும் சிறப்பாக செயல்பட்ட வங்கதேச அணி சில விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய அணிக்கு அழுத்தம் கொடுத்தது.
இருப்பினும் ஷுப்மன் கில் மற்றும் கேஎல் ராகுல் இணை சிறப்பான பார்ட்னர்ஷிப் அமைத்து 47ஆவது ஓவரில் அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர். இதில் ஷுப்மன் கில் 101 ரன்களையும், கேஎல் ராகுல் 41 ரன்களையும் சேர்த்தனர். இதயடுத்து வங்கதேச அணி அடுத்ததாக நியூசிலாந்து அணியை எதிர்கொள்ளவுள்ளது. இப்போட்டியில் வங்கதேச அணி வெற்றிபெற்றால் மட்டுமே இத்தொடரில் நீடிக்க முடியும் என்ற கட்டாயத்தில் உள்ளதால், தீவிரமாக தயாராகி வருகிறது.
இந்நிலையில் இப்போட்டிக்கு முன்னதாக வங்கதேச அணியின் அனுபவ வீரர் மஹ்மூதுல்லா தனது காயத்தில் இருந்து மீண்டு முழு உடற்தகுதியை எட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன்மூலம் அவர் நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் விளையாடுவதும் ஏறத்தாள உறுதியாகியுள்ளது. அவர் முழு உடற்தகுதியுடன் இப்போட்டியில் பங்கேற்கும் பட்சத்தில் அது வங்கதேச அணிக்கு பெரும் உத்வேகமாக அமையும்.
ஏனெனில் அவர் கடைசியாக விளையாடிய 4 ஒருநாள் போட்டிகளிலும் அரைசதம் கடந்து சிறப்பான ஃபார்முல் உள்ளார். இந்திய அணிக்கு எதிரான போட்டியிலேயே அவர் பிளேயிங் லெவனில் இடம்பிடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பயிற்சியின் போது ஏற்பட்ட காயம் காரணமாக அவரால் லெவனில் இடம்பிடிக்க முடிவில்லை. இந்நிலையில் அவர் காயத்தில் இருந்து குணமடைந்துள்ளது அணிக்கு பெரும் பலமாக மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Also Read: Funding To Save Test Cricket
சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான வங்கதேச அணி: நஜ்முல் ஹொசைன் சாண்டோ(கேப்டன்), சௌமியா சர்க்கார், தன்ஸித் ஹசன், தாவ்ஹித் ஹ்ரிடோய், முஷ்ஃபிக்கூர் ரஹீம், மஹ்மூதுள்ளா, ஜக்கர் அலி அனிக், மெஹிதி ஹசன் மிராஸ், ரிஷாத் ஹொசைன், தஸ்கின் அஹ்மத், முஸ்தஃபிசூர் ரஹ்மான், பர்வேஸ் ஹொசைன் எமன், நசும் அஹ்மத், தன்சிம் ஹசன் ஷாகிப், நஹித் ராணா.