வருண் சக்கரவர்த்தியின் செயல்திறன் இந்திய அணி தேர்வில் தலைவலியை ஏற்படுத்தும் - அம்பத்தி ராயுடு!

Updated: Mon, Mar 03 2025 13:44 IST
Image Source: Google

ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை தொடரானது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. மொத்தம் 8 அணிகள் பங்கேற்றிருந்த இத்தொடரில் இந்தியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகள் முன்னேறியுள்ளன.

இதில் நாளை நடைபெறும் முதல் அரையிறுதி போட்டியில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியும், ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியும் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இப்போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றன. இந்நிலையில் நியூசிலாந்துக்கு எதிரான கடைசி லீக் போட்டியில் லெவனில் வாய்ப்பு பெற்ற வருண் சக்ரவர்த்தி அபாரமான பந்துவீச்சின் மூலம் இந்திய அணி வெற்றிக்கு உறுதுணையாக இருந்தார்.

இப்போட்டியில்10 ஓவர்களை வீசிய வருண் சக்ரவர்த்தி 42 ரன்களைக் கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அவரின் இந்த சிறப்பான ஆட்டத்தின் மூலம் இப்போட்டியின் ஆட்ட நாயகன் விருதையும் கைப்பற்றினார். இதனால் அரையிறுதி போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனிலும் வருண் சக்ரவர்த்தி இடம்பிடிப்பார் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. முன்னதாக இத்தொடரின் முதலிரண்டு லீக் போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனில் வருண் சக்ரவர்த்திக்கு இடம் கிடைக்கவில்லை.

ஆனால்நேற்றைய கடைசி லீக் போட்டியின் போது இந்திய அணி வேகப்பந்து வீச்சாளர் ஹர்ஷித் ராணாவுக்கு ஓய்வளிக்கப்பட்டதை அடுத்து, வருண் சக்ரவர்த்தி பிளேயிங் லெவனில் இடம்பிடித்தார். இந்நிலையில் வருண் சக்ரவர்த்தி இந்த அபார ஆட்டத்தின் மூலம் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான அரையிறுதி போட்டிக்கு முன்னதாக அணி நிர்வாகத்திற்கு கடுமையான தேர்வு சங்கடத்தை உருவாக்கியுள்ளது என்று முன்னாள் வீரர் அம்பதி ராயுடு தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து பேசிய அவர், “வருண் மிகச்சிறந்தவர். அவர் ஆரம்ப காலத்தில் தனது பந்துவீச்சில் லைன் மற்றும் லெந்தில் அவ்வளவு சீராக இருக்கவில்லை. ஆனால் இப்போது, ​​அவரது பந்துவீச்சு அவரை எதிர்கொள்ள மிகவும் கடினமான பந்து வீச்சாளராக ஆக்குகிறது. மேலும் அவர் பந்துவீசும் முறை இயல்பாகவே இடது கை சுழற்பந்து வீச்சை போல் தெரிகிறது, ஆனால் அவரது 90 சதவீத பந்துவீச்சுகள் கூக்ளி பந்துகளாக இருக்கின்றன, இது அவரை இதற்கு முன்பு எதிர்கொள்ளாத பேட்ஸ்மேன்களுக்கு கடினமாக உள்ளது.

Also Read: Funding To Save Test Cricket

நியூசிலாந்து பேட்ஸ்மேன்கள் பலரும் அவருக்கு எதிராக அதிகம் விளையாடியதாக நான் நினைக்கவில்லை, மேலும் அவர் இந்தியாவுக்காக தொடர்ந்து முன்னேறுவார். அவரது அற்புதமான ஆட்டம் காரணமாக அரையிறுதிக்கு முன் இந்திய அணி தேர்வில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கலாம். தேர்வு செய்ய பல பெரிய வீரர்கள் இருப்பதால், இந்திய அணிக்கு முடிவெடுப்பதில் கடினமான நேரம் இருக்கும், ஆனால் வருண் சக்கரவர்த்தி சிறந்தவர் என்பதில் மாற்று கருத்து இல்லை” என்று தெரிவித்துள்ளார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை