ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை அரையிறுதி போட்டியில் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி வெற்றிபெற்றுதுடன் இறுதிப்போட்டிக்கும் முன்னேறி அசத்தியது. இதன் காரணமாக ஆஸ்திரேலிய அணி அரையிறுதி சுற்றுடன் இத்தொடரில் இருந்து வெளியேறியுள்ளது. 

Advertisement

இந்நிலையில் இப்போட்டியில் 280 ரன்களுக்கு மேல் அடித்திருந்தால் முடிவு வேறு விதமாக இருந்திருக்கும் என்று ஆஸ்திரேலிய அணி கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய ஸ்மித், “இந்தப் போட்டியில் எங்கள் அணி பந்து வீச்சாளர்கள் உண்மையிலேயே சிறப்பாக செயல்பட்டார்கள் என்று நான் நினைக்கிறேன், அவர்கள் முழுவதும் கடினமாக உழைத்தார்கள், சுழற்பந்து வீச்சாளர்கள் ஆட்டத்தை ஆழமாக எடுத்துச் சென்றார்கள்.

Advertisement

இந்த பிட்ச் பேட்டிங் செய்வதற்கு சற்று கடினமாக இருந்ததால் ஸ்டிரைக்கை ரொட்டேட் செய்ய கடினமாக இருந்தது. வேகப்பந்து வீச்சாளர்களுக்கு இது இரட்டை வேக ஆடுகளமாக இருந்தது. நாம் இன்னும் சில ரன்கள் எடுத்திருக்கலாம். முக்கியமான நேரங்களில் சில விக்கெட்டுகளை இழந்தோம். நாங்கள் 280 அல்லது அதற்கு மேற்பட்ட ரன்கள் எடுத்திருந்தால், இப்போட்டியின் முடிவு வித்தியாசமாக இருந்திருக்கும்.

ஆட்டத்தின் ஒவ்வொரு கட்டத்திலும் நாங்கள் ஒரு விக்கெட் அதிகமாக வீழ்த்தியது போல் உணர்ந்தேன். நாங்கள் ஒன்றிணைந்த விதம் சிறப்பாக இருந்தது. பந்துவீச்சு பிரிவு அற்புதமான வேலையைச் செய்தது, சில பேட்ஸ்மேன்கள் சிறப்பாக செயல்பட்டனர். இங்கிலாந்துக்கு எதிராக நாங்கள் விதிவிலக்காக சிறப்பாக விளையாடினோம். மேலும் அணியில் உள்ள சில நல்ல கிரிக்கெட் வீரர்கள், அவர்கள் பெரியவர்களாகவும் சிறந்தவர்களாகவும் மாறப் போகிறார்கள்” என்று தெரிவித்துள்ளார்.

இப்போட்டி குறித்து பேசினால், டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணியில் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித், அலெக்ஸ் கேரி ஆகியோர் அரைசதம் கடந்த நிலையில் மற்ற வீரர்கள் சோபிக்க தவறியதன் காரண்மாக 49.3 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 264 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்திய அணி தரப்பில் முகமது ஷமி 3 விக்கெட்டுகளையும், வருண் சக்ரவர்த்தி, ரவீந்திர ஜடேஜா தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். 

Also Read: Funding To Save Test Cricket

Advertisement

அதன்பின் இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணியில் தொடக்க வீரர்கள் சோபிக்க தவறினர். அதன்பின் விராட் கோலி 84 ரன்களையும், ஸ்ரேயாஸ் ஐயர் 45 ரன்களையும், இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த கேஎல் ராகுல் 42 ரன்களையும் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடித்தந்தனர். இதன்மூலம் இந்திய அணி 48.1 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News