டெத் ஓவர்களில் நாங்கள் சிறப்பாக செயல்படவில்லை - ஜோஸ் பட்லர்!
ஆஃப்கானிஸ்தான் - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான சாம்பியன்ஸ் கோப்பை லீக் போட்டி லாகூரில் உள்ள கடாஃபி கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஃப்கானிஸ்தான் அணி இன்னிங்ஸ் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 325 ரன்களைக் குவித்தது.
இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய இப்ராஹிம் ஸத்ரான் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் தனது 6ஆவது சதத்தைப் பதிவுசெய்து அசத்தியதுடன் 12 பவுண்டரி, 6 சிக்ஸர்களுடன் 177 ரன்களையும், அஸ்மதுல்லா ஒமர்ஸாய் 41 ரன்களையும், ஹஸ்மதுல்லா ஷாஹிதி மற்றும் முகமது நபி ஆகியோர் தலா 40 ரன்களையும் குவித்தது. இங்கிலாந்து தரப்பில் ஜோஃப்ரா ஆர்ச்சர் 3 விக்கெட்டுகளையும், லியாம் லிவிங்ஸ்டோன் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
இதையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய இங்கிலாந்து அணியில் ஜோ ரூட் சதமடித்து அசத்தியதுடன் 120 ரன்களையும், பென் டக்கெட் மற்றும் ஜோஸ் பட்லர் ஆகியோர் தலா 38 ரன்களைச் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் பெரிதளவில் சோபிக்க தவறியதன் காரணமாக அந்த அணி 317 ரன்களில் ஆல் அவுட்டானது. இதன்மூலம் ஆஃப்கானிஸ்தான் அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி வெற்றிபெற்றதுடன், அரையிறுதி வாய்ப்பையும் தக்கவைத்துள்ளது.
இந்நிலையில் இப்போட்டியில் தோல்வியடைந்தது குறித்து பேசிய இங்கிலாந்து அணி கேப்டன் ஜோஸ் பட்லர், “இத்தொடரில் இருந்து லீக் சுற்றுடன் வெளியேறியது ஏமாற்றமளிக்கிறது. இப்போட்டியில் நாங்கள் வெற்றி பெறும் வாய்ப்புகள் கிடைத்தன, ஆனால் நீங்கள் அவற்றைப் பயன்படுத்திக் கொள்ளவில்லை என்று இங்கிலாந்து கேப்டன் ஜோஸ் பட்லர் தெரிவித்துள்ளார். ஜோ ரூட் நம்பமுடியாத இன்னிங்ஸை விளையாடினார், ஆனால் அவருடன் இணைந்து எங்களால் பார்ட்னர்ஷிப் அமைக்க முடியவில்லை.
Also Read: Funding To Save Test Cricket
மேலும் டெத் ஓவர்களில் நாங்கள் சிறப்பாக செயல்படவில்லை. கடைசி 10 ஓவர்களில் நாங்கள் 113 ரன்களை கொடுத்ததன் மூலம் அவர்களால் வலுவான ஸ்கோரை பதிவுசெய்ய முடிந்தது. இப்போட்டியில் இப்ராஹிம் ஸத்ரான் ஒரு அற்புதமான இன்னிங்ஸை விளையாடினார். அவருக்கு என்னுடைய பாராட்டுகள். உலகின் சிறந்த வீரர்களில் ஒருவராக இருந்து, நீங்கள் சிறப்பாக செயல்படாதபோது ஏமாற்றம்தான். எந்த உணர்ச்சிகரமான முடிவுகளையும் எடுக்க விரும்பவில்லை” என்று தெரிவித்துள்ளார்.