இந்தியாவை வீழ்த்திய இலங்கை; சாதனை கேப்டன் வரிசையில் சரித் அசலங்கா!

இந்திய கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. இதில் முதலில் நடைபெற்ற டி20 தொடரில் சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி 3-0 என்ற கணக்கில் இலங்கை அணியை வீழ்த்திய்துடன் தொடரையும் முழுமையக கைப்பற்றி அசத்தியது. இதனையடுத்து நடைபெற்ற ஒருநாள் தொடரின் முதல் போட்டியானது டையில் முடிவடைந்தது.
அதன்பின் நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி வெற்றிபெற்று 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை பெற்றிருந்த நிலையில், நேற்று நடைபெற்ற மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியிலும் இலங்கை அணி 110 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியதுடன், ஒருநாள் தொடரையும் 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியுள்ளது.
இந்த வெற்றியின் மூலம் இலங்கை அணியானது எதிராக 27 வருடங்களுக்கு பின், அதாவது 1997ஆம் ஆம் ஆண்டிற்கு பிறகு இந்திய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை கைப்பற்றியும் சாதனை படைத்துள்ளது. இந்நிலையில் இத்தொடரில் இந்திய அணியை வீழ்த்தி தொடரை வென்ற இலங்கை அணியின் புதிய கேப்டனாக செயல்பட்ட சரித் அசலங்கா சாதனை பட்டியலிலும் இணைந்துள்ளார்.
அந்தவகையில் இந்திய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை வென்ற இரண்டாவது இலங்கை கேப்டன் எனும் பெருமையை சரித் அசலங்கா பெற்றுள்ளார். இதற்கு முன்னதாக இலங்கை அணியின் முன்னாள் கேப்டன் அர்ஜுனா ரணதுங்கா, கடந்த 1993 மற்றும் 1997ஆம் ஆண்டுகளில் இலங்கை அணியின் கேப்டனாக செயல்பட்டு, இந்தியாவிற்கு எதிரான ஒருநாள் தொடர்களை கைப்பற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read: Akram ‘hopes’ Indian Team Will Travel To Pakistan For 2025 Champions Trophy
அதேசமயம் இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை இழந்த இரண்டாவது இந்திய கேப்டன் எனும் மோசமான சாதனையை ரோஹித் சர்மா படைத்துள்ளார். முன்னதாக கடந்த 1997ஆம் ஆண்டு இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை சச்சின் டெண்டுல்கர் தலைமையிலான இந்திய அணி இழந்தது குறிப்பிடத்தக்கது.