விறுவிறுப்பாக நடைபெற்றுவரும் ஐபிஎல் தொடரின் 15ஆவது சீசனில் இன்று இரவு நடைபெறும் லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சைந் அடத்துகின்றன. 

Advertisement

நடப்பு சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதுவரை மொத்தம் 10 போட்டிகளில் 3 வெற்றிகளை மட்டுமே பெற்றுள்ளது. மறுபக்கம் டெல்லி அணி 10 போட்டிகளில் 5 வெற்றிகளை பெற்று, 5ஆவது இடத்தில் நீடித்து வருகிறது.

Advertisement

போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள் - சென்னை சூப்பர் கிங்ஸ் vs டெல்லி கேப்பிட்டல்ஸ்
  • இடம் - டிஒய் பாட்டில் மைதானம், மும்பை
  • நேரம் - இரவு 7.30 மணி

போட்டி முன்னோட்டம்

மொத்தம் 10 அணிகள் விளையாடி வருவதால், இம்முறை 16 புள்ளிகளை பெறும் அணிகள்தான் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. அரிதான நேரத்தில் 14 புள்ளிகள் பெரும் அணிகளும் பிளே ஆஃப் செல்லும் எனவும் கிரிக்கெட் விமர்சகர்கள் கருதுகிறார்கள். அப்படிப் பார்த்தால் சிஎஸ்கேவுக்கு இன்னமும் பிளே ஆஃப் வாய்ப்பு இருப்பதாகவே கருதப்படுகிறது. இனி அடுத்த 3 போட்டிகளிலும் மெகா வெற்றியைப் பெற்றால் மட்டுமே இது சாத்தியம். 

டெல்லி அணி 10 போட்டிகளில் 5 வெற்றிகளை பெற்றுள்ள நிலையில், அடுத்த 4 போட்டிகளில் மூன்று வெற்றிகளை பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. இதனால், இன்று சிஎஸ்கேவுக்கு கடும் சவால்களை அளிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

பிட்ச் ரிப்போர்ட்

டிஒய் படேல் ஸ்டேடியத்தில் சிஎஸ்கே 3 போட்டிகளில் விளையாடி இரண்டு வெற்றிகளைப் பெற்றுள்ளது. டெல்லி ஒரேயொரு போட்டியில் விளையாடி தோற்றுள்ளது. சேஸ் செய்யும் அணிக்குத்தான் இங்கு வெற்றி வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது.

நேருக்கு நேர்

  • மோதிய போட்டிகள் - 26
  • சிஎஸ்கே வெற்றி - 16
  • டெல்லி வெற்றி - 10
Advertisement

உத்தேச லெவன் 

சென்னை சூப்பர் கிங்ஸ் - ருதுராஜ் கெய்க்வாட், டெவோன் கான்வே, மொயீன் அலி, ராபின் உத்தப்பா, அம்பதி ராயுடு, எம்எஸ் தோனி (சி & டபிள்யூ), ரவீந்திர ஜடேஜா, டுவைன் பிரிட்டோரியஸ், சிமர்ஜீத் சிங், முகேஷ் சௌத்ரி, மகேஷ் தீக்ஷனா

டெல்லி கேப்பிட்டல்ஸ் - டேவிட் வார்னர், மன்தீப் சிங் / பிரித்வி ஷா, மிட்செல் மார்ஷ், ரிஷப் பந்த் (கே), லலித் யாதவ், ரோவ்மன் பவல், ரிபால் பட்டேல் / அக்சர் படேல், ஷர்துல் தாக்கூர், குல்தீப் யாதவ், கலீல் அகமது, அன்ரிச் நார்ட்ஜே

Advertisement

ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்

  •      விக்கெட் கீப்பர் - ரிஷப் பந்த்
  •      பேட்டர்ஸ் - டேவிட் வார்னர், ரோவ்மேன் பவல், டெவோன் கான்வே, ருதுராஜ் கெய்க்வாட்
  •      ஆல்-ரவுண்டர்கள் - மிட்செல் மார்ஷ், மொயின் அலி, டுவைன் பிரிட்டோரியஸ்
  •      பந்துவீச்சாளர்கள் - கலீல் அகமது, குல்தீப் யாதவ், முகேஷ் சவுத்ரி

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News