கரோனா பாதிப்பு காரணமாக பாதியிலேயே ஒத்திவைக்கப்பட்ட 14ஆவது சீசன் ஐபிஎல் தொடரின் இரண்டாம் பாதி ஆட்டங்கள் ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

Advertisement

இதில் நாளை நடைபெறும் 38ஆவது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்கொள்கிறது. 

Advertisement

போட்டி தகவல்கள்

  •     மோதும் அணிகள் - சென்னை சூப்பர் கிங்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
  •     இடம் - ஷேக் சயீத் கிரிக்கெட் மைதானம், அபுதாபி
  •     நேரம் - மாலை 3.30 மணி

போட்டி முன்னோட்டம் 

மகேந்திர சிங் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நடப்பு சீசனில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அசத்தி வருகிறது.

அதிலும் அமீரகத்தில் விளையாடிய 2 போட்டியிலும் சிஎஸ்கே அணி அபாரமாக விளையாடி வெற்றியைப் பெற்றது. இதன் காரணமாக அதே உற்சாகத்துடன் நாளைய போட்டியிலும் விளையாடும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Advertisement

சிஎஸ்கே அணியில் பேட்டிங், பவுலிங் என இரு தரப்பிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவதால் நாளைய போட்டியில் சிஎஸ்கே அணி வெல்லும் என அந்த அணி ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

அதேசமயம் ஈயன் மோர்கன் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் சிறப்பான ஆட்டங்களை வெளிப்படுத்தி அசத்தி வருகிறது. அந்த அணியின் வெங்கடேஷ் ஐயர் தொடர்ந்து சிறப்பாக விளையாடுவது அணிக்கு கூடுதல் பலத்தை அளித்துள்ளது. 

மேலும் பந்துவீச்சில் வருண் சக்ரவர்த்தி, சுனில் நரைன் ஆகியோருடன் லோக்கி ஃபர்குசன் இடம்பிடித்திருப்பது எதிரணிக்கு சற்று பதற்றத்தை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

நேருக்கு நேர்

  •     மோத்த ஆட்டங்கள் - 24
  •     சிஎஸ்கே வெற்றி -15
  •     கேகேஆர் வெற்றி -6
  •     முடிவில்லை - 1

உத்தேச அணி

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - சுப்மன் கில், வெங்கடேஷ் ஐயர், ராகுல் திரிபாதி, நிதிஷ் ராணா, ஈயான் மோர்கன் (கே), தினேஷ் கார்த்திக், ஆண்ட்ரே ரஸ்ஸல், சுனில் நரைன், லோக்கி ஃபர்குசன், வருண் சக்கரவர்த்தி, பிரசித் கிருஷ்ணா.

Advertisement

சென்னை சூப்பர் கிங்ஸ் - ஃபாஃப் டு பிளெசிஸ், ருதுராஜ் கெய்க்வாட், மொயீன் அலி, சுரேஷ் ரெய்னா, அம்பதி ராயுடு, எம்எஸ் தோனி (கே), ரவீந்திர ஜடேஜா, டுவைன் பிராவோ, ஷர்துல் தாக்கூர், தீபக் சாஹர், ஜோஷ் ஹேசில்வுட்.

பேண்டஸி லெவன்

  •     விக்கெட் கீப்பர்கள் - தினேஷ் கார்த்திக்
  •     மட்டையாளர்கள் - ஃபாஃப் டூ பிளெசிஸ், ருதுராஜ் கெய்க்வாட், வெங்கடேஷ் ஐயர்
  •     ஆல் -ரவுண்டர்கள் - டுவைன் பிராவோ, மொயீன் அலி, ரவீந்திர ஜடேஜா, ஆண்ட்ரே ரஸ்ஸல்
  •     பந்துவீச்சாளர்கள் - வருண் சக்ரவத்தி, ஷர்துல் தாக்கூர்.
Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News