கவுண்டி கிரிக்கெட்: இரட்டை சதம விளாசி புஜாரா அசத்தல்!
கவுன்டி சாம்பியன்ஷிப் டிவிஷன் 2 பிரிவில் லார்ட்ஸில் சஸ்செக்ஸ் - மிடில்செக்ஸ் அணிகளுக்கிடையிலான நான்கு நாள் ஆட்டம் நடைபெற்று வருகிறது. சஸ்செக்ஸ் அணியின் கேப்டனான புஜாரா நியமிக்கப்பட்டார்.
அதன்படி இப்போட்டியில் டாஸ் வென்ற மிடில்செக்ஸ் அணி முதலில் பந்துவீசுவதா தீர்மானித்து களமிறங்கியது. இதையடுத்து களமிறங்கிய செக்ஸ் அணி கேப்டன் புஜாரா, டாம் அஸ்லாப் ஆகியோரின் அபார சதத்தின் மூலம் முதல் நாள் ஆட்டநேர முடிவில் அந்த அணி 328 ரன்களைச் சேர்த்திருந்தது.
அதன்பின் நேற்று நடைபெற்ற இரண்டாம் நாள் ஆட்டத்தில் தனது அபாரமான ஆட்டத்தஒ வெளிப்படுத்தி வந்த கேப்டன் புஜாரா, இரட்டைச் சதம் அடித்து அசத்தினார். மேலும் 403 பந்துகளில் 3 சிக்ஸர்கள், 21 பவுண்டரிகளுடன் 231 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
இதன்மூலம்சஸ்செக்ஸ் அணி முதல் இன்னிங்ஸில் 523 ரன்கள் எடுத்தது. அதன்பின் முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய மிடில்செக்ஸ் அணி இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 103 ரன்களைச் சேர்த்துள்ளது.
இந்தாண்டு கவுண்டி கிரிக்கெட் தொடரில் புஜாரா அடித்துள்ள 3ஆவது இரட்டைச் சதம் இதுவாகும். மேலும் லார்ட்ஸில் மிடில்செக்ஸ் அணிக்கு எதிராக இரட்டைச் சதம் எடுத்த முதல் சஸ்செக்ஸ் வீரர் என்கிற பெருமையை புஜாரா பெற்றுள்ளார். அதேபோல் 118 வருடங்கள் கழித்து ஒரே கவுன்டி பருவத்தில் 3 இரட்டைச் சதம் அடித்த முதல் சஸ்செக்ஸ் வீரரும் அவர் தான்.