பார்டர் கவாஸ்கர் தொடரில் சட்டேஷ்வர் புஜாரா; பேட்டராக அல்லாமல் புதிய அவதாரம்!

Updated: Mon, Nov 18 2024 16:15 IST
Image Source: Google

அஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அண்ணி 5 போட்டிகளை கொண்ட பார்டர் கவாஸ்கர் கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடவுள்ளது. அதன்படி ஆஸ்திரேலியா - இந்தியா அணிகளுக்கு இடையேயான இந்த டெஸ்ட் தொடரானது வரும் நவம்பர் 22ஆம் தேதி தொடங்கவுள்ளது.

இத்தொடருக்கான இந்திய அணியையும் பிசிசிஐ சமீபத்தில் அறிவித்திருந்தது.  அதன்படி இந்திய அணியில் அறிமுக வீரர்கள், அபிமன்யூ ஈஸ்வரன், நிதீஷ் குமார் ரெட்டி, ஹர்ஷித் ரானா உள்ளிட்டோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இவர்களுடன் பிரஷித் கிருஷ்ணாவுக்கும் இந்திய டெஸ்ட் அணியில் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளனர். அதேசமயம் குல்தீப் யாதவ், அக்ஸர் படேல், முகமது ஷமி ஆகியோருக்கு இந்த அணியில் இடம் கிடைக்கவில்லை.

இந்நிலையில் ஆஸ்திரேலியா சென்றடைந்துள்ள இந்திய அணி வீரர்கள் தங்களது பயிற்சியை தொடங்கியுள்ளனர். அதன்படி இந்திய வீரர்களே இரு குழுக்களாக பிரிந்து தற்சமயம் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் கடந்த இருமுறை ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது இந்திய அணி டெஸ்ட் தொடரை கைப்பற்றியுள்ளதால் இம்முறையும் வெற்றி பெற்று ஆஸ்திரேலிய மண்ணில் ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்யும் முனைப்புடன் காத்திருக்கிறது.

அதே வேளையில் சொந்த மண்ணில் இரண்டு முறை டெஸ்ட் தொடரை இழந்த ஆஸ்திரேலிய அணி இம்முறையாவது வெற்றியைப் பதிவுசெய்வதுடன் மீண்டும் இத்தொடரை கைப்பற்றும் முனைப்புடன் விளையாடவுள்ளது. இதனால் இம்முறை இந்திய அணிக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அந்த அணியும் தீவிரமாக தயாராகி வருகிறது. எனவே இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இந்த டெஸ்ட் தொடரானது தற்போது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது.

முன்னதாக இந்திய அணியின் தடுப்புச்சுவர் என்று அழைப்பட்ட நட்சத்திர வீரர் சட்டேஷ்வர் புஜாரா இன்றி இத்தொடரி இந்திய அணி விளையாட இருக்கிறது. ஏனெனில் கடந்த் இரண்டு முறையிலும் இந்திய அணி பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரை வென்றதில் புஜாராவிற்கு தனி இடம் உள்ளது. ஆனால் சமீப காலங்களில் வயது மூப்பு மற்றும் மோசமான ஃபார்ம் காரணமாக இந்திய அணியில் இடம் கிடைக்காமல் சட்டேஷ்வர் புஜாரா ஓரங்கட்டப்பட்டார். 

இருப்பினும் இங்கிலாந்தின் கவுண்டி தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர் மீண்டும் இந்திய அணிக்கு திரும்புவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனாலும், சமீபத்தில் நடந்த எந்தவொரு டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியிலும் புஜராவின் பெயரைக் கூட யாரும் பரிந்துரை செய்யவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனால் புஜாராவின் எதிர்காலமும் ஏறத்தாழ முடிவுக்கு வந்துவிட்டதாக கூறப்படுகிறது. 

Also Read: Funding To Save Test Cricket

ந்நிலையில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடரில் வீரராக இடம் பிடிக்காத புஜாரா, இந்த தொடரில் தொலைக்காட்சி வர்ணனையாளராக செயல்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே இந்திய அணியில் இடம் பிடிக்காத போது தினேஷ் கார்த்திக் வர்ணனையாளராக செயல்பட்ட நிலையி, தற்போது அவரை பின்பற்றி புஜாராவும் வர்ணனையாளராக இத்தொடரில் அறிமுகமாகவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை