கவுண்டி கிரிக்கெட்: சதமடித்து அசத்திய சட்டேஷ்வர் புஜாரா!
இந்திய கிரிக்கெட் அணியில் இருந்து புஜாரா தற்போது அதிரடியாக நீக்கப்பட்டிருக்கிறார். இதன் காரணமாக இந்தியாவில் நடைபெற்ற உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்று வந்த புஜாரா தற்போது கவுண்டி கிரிக்கெட் விளையாடுவதற்காக இங்கிலாந்து சென்றுள்ளார்.
கடந்துமுறையே புஜாரா இங்கிலாந்தில் விளையாடிவிட்டு தான் செம qபார்மில் இருந்தார். இதேபோன்று தற்போது இங்கிலாந்தில் நடைபெற்று வரும் ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் புஜாரா தன்னுடைய திறமையை வெளிப்படுத்திருக்கிறார்.
டெஸ்ட் வீரர் என்று முத்திரை குத்தப்பட்ட புஜாரா சசெக்ஸ் அணிக்காக இன்றைய ஆட்டத்தில் களம் இறங்கினார். இதில் டாஸ் வென்ற சசெக்ஸ் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதில் தொடக்க வீரர் டாம் 6 ரன்களிலும் ஹெனீஸ் 13 ரன்களிலும் ஆட்டம் இழந்தனர். மூன்றாவது வீரராக களத்திற்கு வந்த புஜாரா நிதானமாக ரன்களை சேர்த்தார்.
ஒரு புறம் சசெக்ஸ் அணியின் மற்ற வீரர்கள் வந்த வேகத்திலேயே அடுத்தடுத்து வெளியேறினர். எனினும் தனி ஆளாக நின்று போராடிய புஜாரா சதம் விளாசினார். 119 பந்துகளை எதிர்கொண்ட அவர் 106 ரன்கள் எடுத்தார். இதில் நான்கு பவுண்டரிகளும் இரண்டு சிக்ஸர்களும் அடங்கும்.
இதில் புஜாரா கடைசி வரை ஆட்டம் இழக்காமல் நின்றார். இதனால் சஸ்சக்ஸ் அணி 7 விக்கெட் இழப்பிற்கு 240 ரன்கள் எடுத்தது.
இதனை அடுத்து நார்த்தாம்டன்ஷையர் அணியில் இந்திய வீரர் பிரித்வி ஷா களமிறங்கினார். அவர் வழக்கம் போல் அதிரடியாக விளையாடி நான்கு பவுண்டரிகளை அடித்தார். எனினும் 17 பந்துகளில் 26 ரன்கள் எடுத்த போது அவர் ஆட்டம் இழந்தார். மேலும் நார்த்தாம்டன்ஷையர் அணியில் யாரும் அரைசதம் அடிக்கவில்லை என்றாலும் 30 ரன்கள், 37 ரன்கள், 36 ரன்கள், 42 ரன்கள் என நல்ல தொடக்கத்தை கொடுத்தனர்.
இதன் காரணமாக 43.4 ஓவரில் 243 எண்கள் எடுத்து அந்த அணி வெற்றி பெற்றது. இதன் மூலம் சதம் அடித்தும் பு ஜாரா அணி தோல்வியை தழுவியது.புஜாரா இந்த தொடரில் சிறப்பாக விளையாடி வருவது இந்திய ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை தந்துள்ளது.