WPL 2025: தொடருக்கு முன் மாற்றங்களைச் செய்த யுபி வாரியர்ஸ், ஆர்சிபி!

Updated: Mon, Feb 03 2025 12:52 IST
Image Source: Google

இந்தியாவில் மகளிர் கிரிக்கெட்டை மேம்படுத்தும் விதமாக மகளிர் பிரிமியர் லீக் கிரிக்கெட் தொடரை பிசிசிஐ கடந்த 2023ஆம் ஆண்டு தொடங்கியது. ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இதுவரை இரண்டு சீசன்களை கடந்துள்ள இத்தொடரானது மூன்றாவது சீசனை நோக்கி அடியெடுத்து வைத்துள்ளது. இதில் முதல் சீசனில் மும்பை இந்தியன்ஸும், இரண்டாவது சீசனில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியுள்ளது. 

இதனையடுத்து மகளிர் பிரீமியர் லீக் தொடரின் மூன்றாவது சீசன் அடுத்த பிப்ரவரி 14ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. அதன்படி இத்தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்த்து குஜராத் ஜெயண்ட்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது. இந்நிலையில் வரவிருக்கும் மகளிர் பிரீமியர் லீக் 2025க்கு முன்னதாக யுபி வாரியர்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரூ அணிகளுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. 

அதன்படி ஆஸ்திரேலியா மற்றும் யுபி வாரியர்ஸ் அணியின் கேப்டன் அலிசா ஹீலி நடப்பு மகளிர் பிரீமியர் லீக் தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இதையடுத்து அவருக்கான மாற்று வீராங்கனையாக வெஸ்ட் இண்டீஸின் நட்சத்திர ஆல் ரவுண்டர் சினெல்லா ஹென்றி யுபி வாரியர்ஸ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். சினெல்லா ஹென்றி வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக 62 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடி 473 ரன்கள் எடுத்து 22 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

அதேபோல் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் சோஃபி டிவைன் மற்றும் வேகப்பந்து வீச்சாளர் கேட் கிராஸ் ஆகியோர் தனிப்பட்ட காரணங்களைக் கூறி இத்தொடரில் இருந்து விலகினர். இதனையடுத்து அவர்களுக்கான மாற்று வீராங்கனைகளாக ஆஸ்திரேலிய அணியைச் சேர்ந்த ஹீதர் கிரஹாம் மற்றும் கிம் கார்த் ஆகியோரை ஆர்சிபி அணி ஒப்பந்தம் செய்துள்ளது.

இதில் ஹீதர் கிரஹாம் ஆஸ்திரேலியாவுக்காக 5 டி20 சர்வதேச போட்டிகளில் 8 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். மறுபுறம், கிம் கார்த் தனது நாட்டிற்காக தொடர்ந்து அற்புதமாக செயல்பட்டு வருகிறார், மேலும் ஆஸ்திரேலியாவுக்காக 59 டி20, 56 ஒருநாள் மற்றும் 4 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய அனுபவத்தைக் கொண்டுள்ளார். அவர் மேலும் டெஸ்டில் 8 விக்கெட்டுகளையும், ஒருநாள் கிரிக்கெட்டில் 55 விக்கெட்டுகளையும், டி20 கிரிக்கெட்டில் 49 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

யுபி வாரியர்ஸ் அணி: சோஃபி எக்லெஸ்டோன், தீப்தி ஷர்மா, தஹ்லியா மெக்ராத், அஞ்சலி சர்வானி, ராஜேஸ்வரி கெய்க்வாட், ஸ்வேதா செஹ்ராவத், கிரண் நவ்கிரே, கிரேஸ் ஹாரிஸ், விருந்தா தினேஷ், பூனம் கெம்மர், சைமா தாகூர், கௌஹர் சுல்தானா, சாமரி அத்தபட்டு, உமா சேத்ரி, அலனா கிங், ஆருஷி கோயல், கிராந்தி கவுர், சினெல்லா ஹென்றி.

Also Read: Funding To Save Test Cricket

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி: ஸ்மிருதி மந்தனா, எல்லிஸ் பெர்ரி, ரேணுகா சிங், ரிச்சா கோஷ், ஸ்ரேயங்கா பாட்டீல், கனிகா அஹுஜா, ஆஷா ஷோபனா, ஜார்ஜியா வேர்ஹாம், ஏக்தா பிஷ்ட், எஸ் மேக்னா, சோஃபி மோலினக்ஸ், டான் மோலினக்ஸ், பிரேமா ராவத், ஜோஷிதா விஜே, ராகவி பிஷ்ட், ஜாக்ரவி பவார், கிம் கார்த், ஹீதர் கிரஹாம்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை