சஹாலை இந்த அணி தான் ஏலத்தில் எடுக்கும் - ஆகாஷ் சோப்ரா!

Updated: Mon, Dec 20 2021 13:32 IST
Image Source: Google

ஐபிஎல் தொடரில் இரு அணிகள் புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ளன. அடுத்த வருடம் முதல் லக்னோ, அகமதாபாத் நகரங்களை அடிப்படையாகக் கொண்டு இரு புதிய அணிகள் இணைகின்றன. 

இதனால் ஐபிஎல் 2022 போட்டியில் விளையாடும் வீரர்களுக்கான மெகா ஏலம் விரைவில் நடைபெறவுள்ளது. ஏலத்துக்கு முன்பு உள்ள வீரர்களின் பட்டியலில் இருந்து 3 வீரர்களைத் தேர்வு செய்துகொள்ள இரு புதிய அணிகளுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

லக்னோ அணியின் தலைமைப் பயிற்சியாளராகப் பிரபல முன்னாள் வீரர் ஆன்டி ஃபிளவரும் ஆலோசகராக இருமுறை ஐபிஎல் கோப்பையை வென்ற முன்னாள் கேப்டனான கவுதம் கம்பீரும் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.

இந்நிலையில் ஆர்சிபி அணியில் விளையாடிய பிரபல வீரர் சஹாலை இரு புதிய அணிகளில் ஏதாவது ஒன்று தேர்வு செய்துகொள்ளும் என முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளார். 

இதுகுறித்து பேசிய அவர், “நியாயமாகச் சொல்வதென்றால் சஹாலுக்கான உரிய மரியாதை அளிக்கப்படவில்லை. ஆர்சிபி அணி அவரைத் தக்கவைத்துக்கொள்ளவில்லை. டிராஃப்ட் முறையில் புதிய அணிக்கு, ஒருவேளை அகமதாபாத் அணிக்கு சஹால் தேர்வாகலாம். 

இல்லாவிட்டால், ஏலத்தில் அதிகத் தொகைக்குத் தேர்வு செய்வார்கள். விஜய் சஹாரே போட்டியில் விளையாடிய எல்லா ஆட்டங்களிலும் சிறப்பாகப் பந்துவீசி குறைவான ரன்களைக் கொடுத்துள்ளார். இதனால் அவரை நிச்சயம் அதிக தொகைக்கு அணிகள் ஏலத்தில் எடுக்கும் என்று தெரிவித்தார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை