பக்கவாதத்தால் கெய்ர்ன்ஸின் கால்கள் செயலிழப்பு!

Updated: Fri, Aug 27 2021 18:41 IST
Image Source: Google

நியூஸிலாந்து அணியின் மிகச்சிறந்த ஆல் ரவுண்டர், பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் என அனைத்து நிலைகளிலும் நியூசிலாந்து அணியில் ஆதிக்கம் செலுத்திய ஒரு வீரர் என்ற பெருமையைப் பெற்றவர் கிறிஸ் கெய்ர்ன்ஸ்.

இவர் 1989-2006 வரை நியூசிலாந்துக்காக 62 டெஸ்ட், 215 ஒரு நாள் சர்வதேச போட்டிகளில் விளையாடி, டெஸ்ட் கிரிக்கெட்டில் 3320 ரன்கள் மற்றும் 218 விக்கெட்டுகளும், ஒருநாள் போட்டிகளில் 4950 ரன்களையும், 201 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு, அவர் ஸ்கை ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சிக்கு வர்ணனையும் செய்து கொண்டிருந்தார்.

இந்நிலையில் கிறிஸ் கெய்ர்ன்ஸுக்குச் சமீபத்தில் இதய அறுவைச் சிகிச்சை நடைபெற்றது. இதன்பிறகு அவருடைய உடல்நிலை மோசமடைந்ததால் சிட்னியில் உள்ள மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு அவருக்கு மற்றொரு அறுவைச் சிகிச்சை நடைபெற்றது. 

இந்நிலையில் கிறிஸ் கெய்ர்ன்ஸின் கால்கள் பக்கவாதத்தால் செயலிழந்து விட்டதாக அவருடைய வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். 

Also Read: சிட்னி சிக்சர்ஸில் மீண்டும் ஓராண்டு ஒப்பந்தமான பிராத்வைட்!

இதுகுறித்து ஆரோன் லாயிட் வெளியிட்டுள்ள அறிக்கையில்“அறுவைச் சிகிச்சையின்போது கெய்ர்ன்ஸின் கால்கள் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டன. முதுகுத்தண்டில் ஸ்டிரோக் ஏற்பட்டதால் அவருடைய கால்கள் செயலிழந்துவிட்டன. தற்போது கான்பெர்ராவில் உள்ள மருத்துவமனையில் கெய்ர்ன்ஸுக்குச் சிகிச்சையளிக்கப்படுகிறது” என குறிப்பிட்டுள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை