கெயிலுக்கு போட்டியாக போஸ் கொடுத்த சஹால்; இணையத்தை கலக்கும் புகைப்படம்!

Updated: Sat, May 01 2021 13:47 IST
Image Source: Google

ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில் பஞ்சாஅப் கிங்ஸ் அணி 32 ரன்கள் வித்தியாசத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை வீழ்த்தி அபார வெற்றியை பதிவுசெய்தது. 

இந்த வெற்றியின் மூலம் தொடர் தோல்விகளை சந்தித்த பஞ்சாப் அணி இப்போது புது உத்வேகம் பெற்றுள்ளது.

இந்தப் போட்டி முடிந்தப் பின்பு இரு அணி வீரர்களும் ஒருவருடன் ஒருவர் பேசிக் கொண்டு இருந்தனர். அப்போது கிறிஸ் கெயில் தன்னுடைய ஜெர்சியை கழட்டி கட்டுமஸ்தான உடலை காட்டி புகைப்படத்துக்கு போஸ் கொடுத்தார்.

இதனை பார்த்த சஹாலும் தன்னுடைய ஜெர்சியை கழட்டி போஸ் கொடுத்தார். இருவரும் பாடி பில்டர்களைப் போல போஸ் கொடுத்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை