அடுத்தடுத்து சிக்ஸர்களை பறக்கவிட்ட கிறிஸ் கெயில் - காணொளி!
ஓய்வு பெற்ற வீரர்களுக்கான மாஸ்டர்ஸ் லீக் டி20 தொடரில் நேற்று நடைபெற்ற நான்காவது லீக் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் மாஸ்டர்ஸ் மற்றும் இங்கிலாந்து மாஸ்டர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து மாஸ்டர்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் மாஸ்டர்ஸ் அணியில் தொடக்க வீரர்கள் கிறிஸ் கெயில் 3 பவுண்டரி, 4 சிக்ஸர்களுடன் 39 ரன்களில் ஆட்டமிழக்க, டுவைன் ஸ்மித் 4 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 35 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய வீரர்களில் ஆஷ்லே நர்ஸ் 2 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 29 ரன்களையும், நர்சிங் தியோனரைன் 3 சிக்ஸர்களுடன் என 35 ரன்களைச் சேர்க்க அந்த அணி 6 விக்கெட் இழப்பிற்கு 179 ரன்களைச் சேர்த்தது.
அதன்பின் இலக்கை நோக்கி விளையாடிய இங்கிலாந்துக்கு அணியில் பில் மஸ்டர்ட் 35 ரன்களையும், கிறிஸ் ஸ்கோஃபீல்ட் 32 ரன்களையும், கிரிஸ் ட்ரெமெல்ட் 27 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் சோபிக்க தவறினர். இதனால் இங்கிலாந்து மாஸ்டர்ஸ் அணி 8 விக்கெட் இழப்பிற்கு 171 ரன்களை மட்டுமே சேர்த்தது. இதன்மூலம் வெஸ்ட் இண்டீஸ் மாஸ்டர்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசதில் இங்கிலாந்து மாஸ்டர்ஸ் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது.
இந்நிலையில் இப்போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் ஜாம்பவான் கிறிஸ் கெயில் தனது வழக்கமான அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி ரசிகர்களுக்கு விருந்து படைத்தார். இப்போட்டியின் தொடக்கத்தில் நிதனமாக விளையாடிய கிறிஸ் கெயில், இன்னிங்ஸின் மூன்றாவது ஓவரை வீசிய ரியான் சைட்பாட்டமின் பந்துவீச்சில் அடுத்தடுத்து இரண்டு சிக்ஸர்களை பறக்கவிட்டு அசத்தினார்.
Also Read: Funding To Save Test Cricket
அதன்படி அந்த ஓவரின் மூன்றாவது பந்தை கிறிஸ் கெயில் லாங் ஆஃப் திசையில் அபாரமான சிக்ஸரை பறக்கவிட்ட நிலையில், அடுத்த பந்தை டீப் மிட் விக்கெட் திசையில் சிக்ஸருக்கு அனுப்பினார். மேற்கொண்டு இப்போட்டியில் கிறிஸ் கெயில் 3 பவுண்டரி, 4 சிக்ஸர்களை விளாசி 39 ரன்களையும் சேர்த்தார். இந்நிலையில் கிறிஸ் கெயில் அடுத்தடுத்து சிக்ஸர்களை விளாசிய காணொளியானது இணையத்தில் வைரலாகி வருகிறது.