கொழும்புவில் இந்தியா - இலங்கை தொடர்: இலங்கை கிரிக்கெட் வாரியம்

Updated: Tue, May 11 2021 14:01 IST
Colombo Set To Host All Matches During India's Tour Of Sri Lanka In July (Image Source: Google)

இந்திய அணி அடுத்த மாதம் இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று ஒருநாள், ஐந்து டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடும் என பிசிசிஐ தலைவர் சௌரவ் கங்குலி தெரிவித்திருந்தார். 

இந்நிலையில் ஜூலை மாதம் நடைபெறும் இத்தொடரின் அனைத்து போட்டிகளையும் கொழும்புவில் உள்ள ஆர். பிரேமதாச மைதானத்தில் நடத்த உள்ளதாக அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. 

இதுகுறித்து இலங்கை கிரிக்கெட் வாரிய தலைவர் அர்ஜுன் டி சில்வா கூறுகையில்,“இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையேயான முழுத் தொடரும் ஒரே இடத்தில் நடத்த திட்டமிட்டுள்ளோம். அதன்படி கொழும்புவில் உள்ள பிரேமதாச மைதானத்தில் போட்டிகள் அனைத்தையும் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது” என தெரிவித்தார்.

இதையடுத்து இத்தொடரில் பங்கேற்கும் இந்திய அணி வருகிற ஜூன் 05 ஆம் தேதி இலங்கைக்கு சென்று, அங்கு 14 நாள்கள் தனிமை படுத்திய பிறகு பயிற்சியை மேற்கொள்ளும் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை