நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும் ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை தொடரானது முதல் முறையாக 1998 ஆம் ஆண்டு நடத்தப்பட்டது. கடைசியாக 2017 ஆம் ஆண்டு இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் நடந்தது. இந்த தொடரில் பாகிஸ்தான் சாம்பியன் பட்டம் வென்றது. இதையடுத்தும் வரும் 2025 ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் கோப்பை தொடர் பாகிஸ்தான் நடைபெற இருந்தாலும், ஐசிசி முக்கியமான ஹோஸ்டிங் ஒப்பந்தத்தில் கையெழுத்திடுமாறு, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் உரிமை கோரியது.

Advertisement

ஆனால், அரசியல் மற்றும் பாதுகாப்பு காரணங்களுக்காக பாகிஸ்தானிற்கு பயணம் செய்ய இந்தியா மறுப்பு தெரிவிக்கும் பட்சத்தில் இழப்பீடு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியது. என்னதான் சாம்பியன்ஸ் கோப்பை தொடரை பாகிஸ்தான் நடத்துவதாக இருந்தாலும், உலகளாவிய அமைப்பு அதனுடன் முக்கியமான ஹோஸ்டிங் ஒப்பந்தத்தில் இன்னும் கையெழுத்திடவில்லை. இது தொடர்பாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் ஜகா அஷ்ரஃப் மற்றும் முதன்மை நிர்வாக அதிகாரி சல்மான் நசீர் ஆகியோர் அஹ்மதாபாத்தில் உள்ள ஐசிசி நிர்வாகக் குழுவைச் சந்தித்து 2025 பிப்ரவரி-மார்ச் மாதங்களில் சாம்பியன்ஸ் டிராபியை பாகிஸ்தானில் நடத்துவது குறித்து ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.

Advertisement

பிசிசிஐ மீண்டும் தனது அணியை பாகிஸ்தானுக்கு அனுப்ப மறுப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து பாகிஸ்தான் அதிகாரிகள் விவாதித்தனர். அதோடு, எந்தவொரு சூழ்நிலையிலும் ஐசிசி போட்டியில் ஒருதலைப்பட்சமான முடிவுகளை எடுப்பதைத் தவிர்க்க வேண்டும் என்று தெளிவுபடுத்தினர். பாதுகாப்பு காரணங்களுக்காக பாகிஸ்தானில் விளையாட இந்தியா மறுத்தால், சர்வதேச அமைப்பு ஒரு சுதந்திரமான பாதுகாப்பு நிறுவனத்தை நியமிக்க வேண்டும் என்று பிசிபி அதிகாரிகள் ஐசிசியிடம் கூறியதாக சொல்லப்படுகிறது. 

கடந்த சில ஆண்டுகளில் பல சர்வதேச அணிகள் பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் விளையாடி இருந்தாலும், இந்தியா மட்டும் பாகிஸ்தானுக்கு வரவில்லை. ஆசிய கோப்பைக்கு கூட இந்திய அணி பாகிஸ்தான் வரவில்லை. இலங்கையில் தான் போட்டிகள் நடத்தப்பட்டது. ஆசிய கிரிக்கெட் கவுன்சிலுடன் ஒப்பந்தம் செய்த போதிலும் பாகிஸ்தானில் 4 போட்டிகள் மட்டுமே நடத்தப்பட்டது. இறுதியாக இந்த ஆலோசனைக் கூட்டத்தின் போது சாம்பியன்ஸ் கோப்பை 2025 தொடரை நடத்தும் உரிமையிலிருந்து பாகிஸ்தான் ஒரு போதும் பின்வாங்காது என்று பாகிஸ்தான் அதிகாரிகள் கூறியதாக தகவல் தெரிவிக்கின்றது.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News