தயவு செய்து தொடரில் கவனம் செலுத்துங்கள் - கொந்தளிக்கும் கபில் தேவ்!

Updated: Thu, Dec 16 2021 15:46 IST
"Control The Situation": Kapil Dev To Virat Kohli, Sourav Ganguly On Captaincy Issue (Image Source: Google)

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி நேற்று பத்திரிகையாளர்களிடம் வைத்த குற்றச்சாட்டுக்கள் பரபரப்பை கிளப்பியது. கேப்டன் பதவியில் இருந்து விலக வேண்டாம் என கோலியிடம் வலியுறுத்தியதாக கங்குலி விளக்கம் அளித்திருந்தார். ஆனால் கங்குலி கூறுவது பொய் என்பது போல விராட் கூறியுள்ளார்.

இதனால் இந்த விவகாரத்தில் யார் தான் பொய் கூறி வருகிறார்கள் என சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். டி20 கேப்டன் பதவியில் இருந்து விராட் கோலி விலகியபோதே ஒருநாள் அணியின் கேப்டன் பதவியையும் ராஜினாமா செய்ய பிசிசிஐ கோரியிருக்கலாம். ஆனால் அப்படி எதையும் செய்யாதது தற்போது இந்த பூகம்பத்திற்கு காரணமாகியுள்ளது. எனவே இன்று மாலைக்குள் கங்குலி தகுந்த விளக்கத்தை அளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் கபில் தேவ் கொந்தளித்துள்ளார். இதுகுறித்து பேசியுள்ள அவர், “தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான மிக முக்கியமான தொடர்கள் அருகில் உள்ளது. இந்த நேரத்தில் ஒருவர் மீது ஒருவர் பழிபோட்டு வருவது கொஞ்சம் கூட சரியில்லை. இவற்றையெல்லாம் யோசிக்கவே மாட்டீற்களா? தயவு செய்து தென் ஆப்பிரிக்க தொடரில் கவனம் செலுத்துங்கள்.

பிசிசிஐ தலைவர், இந்திய அணி கேப்டன் ஆகியோருக்கு இடையேயான மோதல் என்றால் சாதாரண விஷயம் அல்ல. ஆனால் மிகவும் மதிப்புமிக்க இவர்கள் இருவரும் பொதுவெளியில் இப்படி நடந்துக்கொண்டிருப்பது நல்லதல்ல. தயவு செய்து இந்த பிரச்சினைக்கு சீக்கிரமாக முடிவுக்கட்டுங்கள், உங்கள் ஈகோவை விடுத்து அணியின் நலனை பாருங்கள்” என தெரிவித்துள்ளார்.

விராட் கோலி தலைமையிலான இந்திய டெஸ்ட் அணி இன்று தனி விமானம் மூலம் தென் ஆப்பிரிக்காவுக்கு சென்றடைந்தது. அங்கு இரண்டு அணிகளுக்கு இடையே வரும் டிசம்பர் 26ஆம் தேதி முதல் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெறுகிறது. அதன்பின்னர் ரோஹித் சர்மா தலைமையில் இந்திய அணி 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்பது குறிப்பிடத்தக்கது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை