முத்தரப்பு டி20 தொடர்: நியூசிலாந்து அணியில் கான்வே, நீஷம் சேர்ப்பு!
New Zealand T20 Squad: ஜிம்பாப்வே, தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு எதிரான முத்தரப்பு டி20 தொடரில் விளையாடும் நியூசிலாந்து அணியில் ஃபின் ஆலன் விலகிய நிலையில், அவருக்கான மாற்று வீரராக டெவான் கான்வே சேர்க்கப்பட்டுள்ளார்.
ஜிம்பாப்வே கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகளுடன் இணைந்து முத்தரப்பு டி20 தொடரில் விளையாடவுள்ளது. இந்த முத்தரப்பு டி20 தொடரானது ஜூலை 14ஆம் தேதி முதல் நடைபெறவுள்ளது. மேலும் இந்த முத்தரப்பு டி20 தொடரில் நியூசிலாந்து அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டிருந்தது. மிட்செல் சான்ட்னர் தலைமையிலான இந்த அணியில் பென் சீயர்ஸ், லோக்கி ஃபெர்குசன், கைல் ஜேமிசன் உள்ளிட்டோர் காயம் காரணமாக இடம்பிடிக்கவில்லை.
மேற்கொண்டு நட்சத்திர வீரர் கேன் வில்லியம்சனுக்கும் ஓய்வளிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பெவன் ஜேக்கப்ஸ் மற்றும் ஆடம் மில்னே ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நியூசிலாந்து டி20 அணியில் இடம்பிடித்திருந்த ஃபின் ஆலன் காயம் காரணமாக முத்தரப்பு தொடரில் இருந்து விலகினார். இதன் காரணமாக தற்சமயம் டெவான் கான்வே மீண்டும் நியூசிலாந்து டி20 அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
டெவான் கான்வே தவிர்த்து ஜேம்ஸ் நீஷம், மிட்செல் ஹெய் மற்றும் டிம் ராபின்சன் உள்ளிட்டோரும் ஜிம்பாப்வே முத்தரப்பு டி20 தொடருக்கான நியூசிலாந்து அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். ஏனெனில் முன்னதாக இந்த அணியில் இடம்பிடித்திருந்த மைக்கேல் பிரேஸ்வெல், மார்க் சாப்மேன், கிளென் பிலீப்ஸ் மற்றும் ரச்சின் ரவீந்திரா உள்ளிட்டோர் அமெரிக்காவில் நடைபெற்று வரும் மேஜார் லீக் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகின்றனர்.
மேலும் இவர்கள் இறுதிப்போட்டியில் விளையாடும் அணிகளில் இடம்பிடித்துள்ளதன் காரணமாக, ஜேம்ஸ் நீஷம், டிம் ராபின்சன் உள்ளிட்டோர் கூடுதல் வீரர்களாக இந்த அணியில் சேர்க்கப்பட்டுள்ளதாக நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. அதேசமயம் கிளென் பிலீப்ஸ் மற்றும் ரச்சின் ரவீந்திரா ஆகியோர் மேஜர் லீக் கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி முடித்து அணியில் இணைவார்கள் என்றும் தெளிவுபடுத்தியுள்ளது.
நியூசிலாந்து டி20 அணி: மிட்செல் சான்ட்னர் (கேப்டன்), டெவான் கான்வேன், மைக்கேல் பிரேஸ்வெல், மார்க் சாப்மேன், ஜேக்கப் டஃபி, ஜாக் ஃபால்க்ஸ், மேட் ஹென்றி, பெவன் ஜேக்கப்ஸ்*, ஆடம் மில்னே, டேரில் மிட்செல், வில் ஓ'ரூர்க், கிளென் பிலிப்ஸ், ரச்சின் ரவீந்திரா, டிம் செஃபெர்ட், இஷ் சோதி, மிட்செல் ஹே, ஜேம்ஸ் நீஷாம், டிம் ராபின்சன்.
Also Read: LIVE Cricket Score
முத்தரப்பு டி20 தொடர்
- முதல் டி20, ஜூலை 14 - ஜிம்பாப்வே vs தென் ஆப்பிரிக்கா, ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப்
- 2ஆவது டி20, ஜூலை 16 - தென் ஆப்பிரிக்கா vs நியூசிலாந்து, ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப்
- 3ஆவது டி20, ஜூலை 18 - ஜிம்பாப்வே vs நியூசிலாந்து, ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப்
- 4ஆவது டி20, ஜூலை 20 - ஜிம்பாப்வே vs தென் ஆப்பிரிக்கா, ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப்
- 5ஆவது டி20, ஜூலை 22 - நியூசிலாந்து vs தென் ஆப்பிரிக்கா, ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப்
- 6ஆவது டி20, ஜூலை 24 - ஜிம்பாப்வே vs நியூசிலாந்து, ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப்
- இறுதிப்போட்டி, ஜூலை 26 - ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப்